விவசாயிகள் சங்கம் அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

நாமக்கல்; விவசாயிகள் முன்னேற்றக்கழகம் மற்றும் பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணி-யாளர்கள் சங்க, உயர்மட்ட நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செய-லாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். அதன் நிறுவன தலைவர் செல்ல ராசாமணி தலைமை வகித்து பேசியதாவது:


தற்போது நடந்து வரும், தி.மு.க., அரசு, விவசா-யிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற-வில்லை. மாறாக நாமக்கல் அருகே பல்வேறு எதிர்ப்புகள் இருந்தும், 450 ஏக்கர் விவசாய நிலங்-களை கையகப்படுத்தி, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்க-னவே இருந்த, அ.தி.மு.க., அரசு, நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் இருந்து, கரூர் மாவட்டம், நெரூர் வரை, காவி-ரியின் குறுக்கே தடுப்பணை அமைப்பதாக அறி-வித்து, அதன் சர்வே பணிக்கு, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.கடந்த, 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஒரு-வந்துாரில் இருந்து நெரூர் வரை, காவிரியின் குறுக்கே கதவணையுடன் கூடிய உயர்மட்டப்-பாலம் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. சில மாதங்களில், அந்த திட்டம் கைவிடப்பட்ட-தாக அமைச்சர் அறிவித்தார். இதனால், மோகனுார் பகுதி விவசாயிகள் மிகவும் பாதிக்-கப்பட்டுள்ளனர். கரும்பு, நெல் போன்ற விவசாய விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,ஐ, எங்கள் குழுவினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வந்தால், மோகனுார் அருகே, 'சிப்காட்' திட்டம் கைவிடப்படும். காவிரியில் தடுப்பணை அமைக்கப்படும்; விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாணவர்களின் கல்விக்-கடன் தள்ளுபடி செய்யப்படும், பி.ஏ.சி.எல்., முத-லீட்டாளர்களின் பணத்தை விரைவாக பெற்றுத்-தர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட திட்டங்-களை அறிவித்தார்.
அதனால், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பி.ஏ.சி.எல்., முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவரும், குடும்பத்துடன் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement