ஜெ.,வை போன்று ஆட்சி செய்வார் விஜய்!
எஸ்.சிவநந்தினி, 24
தனியார் ஊழியர், சோழபுரம், சிவகங்கை
ந்த ஐந்து ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் அதிக கொலை சம்பவங்கள், போலீஸ் விசாரணை மரணங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றங்களைத் தடுக்க தி.மு.க., அரசு எந்த முயற்சியையும் செய்யவில்லை. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதேநேரம் மக்களின் நன்மைக்காகவே அரசியலில் இறங்குவதாக கூறி, நடிகர் விஜய் த.வெ.க.,வை தொடங்கியுள்ளார்.
அவர் கட்சி தொடங்கியபோது, அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என, அனைவரும் கேள்வி எழுப்பினர்; கேலி, கிண்டல் செய்தனர். விஜய் முதல்வராகி ஆட்சியில் அமர்ந்தால், கண்டிப்பாக முன்னாள் முதல்வர் ஜெ.,வை போன்று பெண் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து நிர்வாகம் செய்வார். இந்த நம்பிக்கை, இளம் தலைமுறையாகிய எங்களைப் போன்றோரிடம் ஏற்பட்டுள்ளது. இதற்காகவே இந்த சட்டசபை தேர்தலில், 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும், த.வெ.க.,வை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்