இதுதான் தி.மு.க., அரசின் வெற்றி

ஏ.ஜூபின் பரம்சந்த், 22

கல்லுாரி மாணவர், மதுரை




எனக்கு தி.மு.க., மீது சட்டம் -- ஒழுங்கு பிரச்னையில் அதிருப்தி உள்ளது. இருந்தாலும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தியதில் தி.மு.க.,விற்கு முக்கிய பங்கு உள்ளது. மாநில உரிமைகளை காப்பதற்கான வலிமை தி.மு.க., கூட்டணிக்கு மட்டுமே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்கள் என தொடர்ந்து, மக்களுக்கான அரசாக தி.மு.க., விளங்குகிறது.

தி.மு.க., கூட்டணியிலேயே அவர்களது குறைகளை சுட்டிக்காட்டும் தோழமைக் கட்சிகள் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

துாய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டங்களில் தி.மு.க., சறுக்கியது உண்மை. ஆனால் அப்போது எதிர்க்கட்சியை விட கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளே தி.மு.க.,வின் குறைகளை சுட்டிக்காட்டி, அதற்கான தீர்வை பெற்றுத் தந்துள்ளன.

முதல்வரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை, நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்ந்துள்ளோம். இதையே தி.மு.க., அரசின் வெற்றியாக பார்க்கிறேன்.

Advertisement