'டியூஷன் சென்டர்'களிலும் தி.மு.க., பிரசாரம்

1

த.வெ.க., தலைவர் விஜய்க்கு சிறுவர்கள், இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பல வீடுகளில், சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் 'விஜய் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்' என, வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. அதற்கேற்ப, அந்த பள்ளிகளை சுற்றி, 'டியூஷன் சென்டர்கள்' அதிகம் உள்ளன. பல 'டியூஷன் சென்டர்'களில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது தலா, 20 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த இரு தொகுதிகளிலும் உள்ள தி.மு.க.,வினர், டியூஷன் சென்டர்களுக்கு சென்று, 'இலவச லேப்டாப், காலை சிற்றுண்டி' என, தங்கள் ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை கூறி, பெற்றோரிடம் தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க கூறுமாறு பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement