காவலர்களுக்கு 'பதவி உயர்வு' அல்வா
@block_B@ 'காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான ஆண்டு வரம்பு குறைக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதும், காவலர்கள் தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறப் போகிறது என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், காட்சிகள் மாறின. காவலர்களின் நம்பிக்கை பொய்த்து போனது. தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறை அமைச்சர்கள், சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அந்த வரிசையில், முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்த காவல் துறையிலும், பல்வேறு அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. block_B
அவற்றின் விபரம்:
* குற்ற நிகழ்விடத்தை பார்வையிடவும், விசாரணையை வலுப்படுத்தவும், மாநிலத்தில் எல்லா மாவட்டங்களுக்கும், 38.25 கோடி ரூபாயில், நடமாடும் தடய அறிவியல் வாகனங்கள் வழங்கப்படும்
* இரண்டாம் நிலை காவலர்கள், ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தால், முதல் நிலை காவலராக பதவி உயர்வு வழங்கப்படும். முதல் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததும், தலைமைக் காவலர்களாகவும்; 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ.,க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும்
* ஆட்சிக்கு வந்ததும், இரண்டாம் நிலை காவலர்கள் பதவி உயர்வுக்கான கால வரம்பு மாற் றப்படவில்லை. முதல் நிலை காவலர்கள் ஏட்டாக பதவி உயர்வு பெறுவதற்கான கால வரம்பில், மூன்று ஆண்டுகள் குறைக்கப்பட்டன. ஆனால், ஏட்டாக 23 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தான், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது காவலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள து.
* சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லுாரி வளாகத்தில், சைபர் குற்றத்தடுப்பு பிரிவுக்கு, 20 கோடி ரூபாயில் நிர்வாக கட்டடம் கட்டப்படும்
* தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்
* டி.ஜி.பி., அலுவலகத்தில், புதிய கட்டடம் கட்டப்படும்
* பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்கள் மற்றும் குற்றப்பிரிவில் கைப்பற்றப்படும் பொருட்களை வைக்க, சென்னை மற்றும் எல்லா மாவட்டங்களிலும், 3.84 கோடி ரூபாய் செலவில் கிடங்கு அமைக்கப்படும். இந்த அறிவிப்பு சென்னையில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது
* சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், செயற்கை இழை ஓடுதளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்த, நவீன விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்
* எல்லா போலீஸ் நிலையங்களுக்கும், கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் படிப்படியாக வழங்கப்படும்
* சென்னை மாநகர காவல் துறைக்கு புதிய இணையதளம் உருவாக்கப்படும்
* மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்கள் சார்பில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். இந்த அறிவிப்பை ஒன்றிரண்டு கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்
* குற்றவாளிகளை கைது செய்ய, ரிமோட் வாயிலாக விலங்கிடும் 25 கருவிகள் வாங்கப்படும்.
* மத்திய குற்றப்பிரிவுக்கும், தமிழக முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வதற்கும், தனிப்பிரிவு உருவாக்கி பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
தினமலருடைய சிறப்பே செய்தியை காமெடியாக சொல்லி செய்தியுடன் சிரிக்க வைப்பது.
இது திராவிட மாடல் அல்வா...
வேலை செய்பவர்களுக்குதானே பதவி உயர்வு? அரசு இந்த விஷயத்தில் ( மட்டும்) சரியாகச் செயல்படுகிறது! சம்பளத்தை மட்டுமே நம்பி அரசு அதிகாரிகள் யாரும் இல்லை!
திராவிட மாடல் அவங்க வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்காங்க, இதை நிறைவேற்ற. இந்த தேர்தலுக்கும் அதே வாக்குறுதிதான். ஆனால் காவல் துறையினரே நம்பி ஏமாந்து திராவிட மாடலுக்கு வாக்களித்து விடாதீர்கள். . மறுபடியும் அல்வாதான்.மேலும்
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
-
தேர்தலுக்கு 13 நாட்கள் தான்; தமிழக அரசியல் களம் தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!