மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க.,வினர் மீது புகார்
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தொகுதியில் சுவர் விளம்பரமாக வரையப்பட்ட மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க., வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் பாசார், மேலப்பழங்கூர், முட்டியம், மண்டகப்பாடி, பிரிவிடையாம்பட்டு, சிங்காரப்பேட்டை, நுாரோலை, கடுவனுார், மங்கலம், அவிரியூர் ஆகிய கிராமங்களில் சுவரில் வரையப்பட்ட மாம்பழம் சின்னத்தை தி.மு.க., வினர் வெள்ளை நிற பெயிண்டால் அழித்துள்ளனர்.
மேலும், உதயசூரியன் சின்னத்தை வரைந்தால் மட்டுமே ஓட்டுக்கு பணம் தருவோம், இல்லையெனில் பணம் தரமாட்டோம். அரசு மூலம் வரும் நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என கூறி பொதுமக்களை மிரட்டுகின்றனர்.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க., ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளர்கள் தன்ராஜ், வடிவேல், மருத்துவரணி மாநில துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், மணி, முன்னாள் மாவட்ட தலைவர் அமுதமொழி உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்