தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால்...: திருமாவளவன் சொல்வது இதுதான்
விக்கிரவாண்டி: தப்பித்தவறி தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்தால், 6 மாதத்தில் எச். ராஜா அல்லது அண்ணாமலையை பாஜ முதல்வராக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்து பேசியதாவது :
இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஓட்டுப் போட்டதாக தான் அர்த்தம். இரட்டை இல்லை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த இரட்டை இலை. மோடி, அமித்ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்ட இரட்டை இலை. இரட்டை இலையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அது பாஜ வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு அளித்து விடும்.
பாஜ உடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் தப்பித்தவறி அதிமுக ஆட்சிக்கு வந்தால், பாஜவை சேர்ந்தவர் தான் முதல்வராக அமர்வார். 6 மாதத்தில் ஆட்சியை கலைத்து ஆட்டத்தை கலைத்து விடுவார். எச்.ராஜா அல்லது அண்ணாமலையை முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவார்கள். அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்பது வேறு விஷயம். பாஜ எப்படி ஆட்டத்தை ஆடுவார்கள் என தெரியாது.
அனைத்து மாநிலங்களிலும் ஆடுகிற ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். தேர்தலுக்கு பிறகு வேறுமாதிரியாக இருக்கும். அதிமுக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று விட்டால் தமிழக அரசியலையே பாஜ புரட்டி போட்டு விடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
நான் அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் நினைப்பது போல் ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இல்லை. மோடி கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக. பாஜ கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக. நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜவும் வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் 1 தொகுதியில் நிற்கிறது. அதிமுக நம்மை விட ஒரு கூடுதல் தொகுதியில் தான் கூடுதலாக நிற்கிறது. பாஜ அதிக இடங்களில் நிற்கிறது. பாஜ உடன் சேர்ந்தால் அதிமுக எப்படி கரையும் என்பதற்கு அதிமுக புதுச்சேரியில் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து அறியலாம். தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்துவது திமுகவோ, விசிகவோ அல்ல. தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜ தான். அதிமுகவினர் தங்களது ஓட்டுகளை வீணாக்க வேண்டாம்.
'விசில்' அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்க
பாஜ தமிழகத்தில் வளர்ந்துவிடக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த கட்சிக்கு ஆதரவாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல், விசில் (த.வெ.க.,) பக்கம் ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது. சட்டசபை மற்றும் லோக்சபாவில் விசில் அடிப்பதற்கு அனுமதி கிடையாது. விசில் அடிப்பவர்களை , சினிமா தியேட்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் விசில் அடிப்பதற்கு ஏற்ற இடம் சினிமா தியேட்டர்தான். அவர்களுக்கு சட்டசபையில் வேலை கிடையாது.
திமுகவின் ஆதரவால் மட்டுமே அரசியல் அங்கீகாரம்
திமுக கூட்டணியில் விசிக தொடர்ந்து நீடிப்பதற்கு, கொள்கை பிடிப்புதான் காரணம். கடந்த சட்டசபை தேர்தலில் 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. அத்துடன், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விசிக இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் தான், நமக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற பெருமை கிடைத்தது.
இந்தியாவில் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றும் நான்கு கட்சிகளுக்கு மட்டுமே அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள விசிக வும் ஒன்று. இதற்கு அடித்தளமிட்டது திமுக தான். இதற்கு உறுதுணையாக இருந்த திமுகவிற்கு நாமும் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Vested& False Mental Propagandas
சிறுபான்மை வாக்குகள் என்டிஏ கூட்டணிக்குத் தப்பித் தவறிக்கூட போய்விடக்கூடாது என்பதால் இந்தப் பேச்சு .....
அவரது காட்சியைப்பற்றி கூட கவலை இலை ஆனால் அடுத்த கட்சி எப்படி இருக்கிறது எப்படி அவர்கள் அடுத்த முதல்வரை ஆளாக்குவார்கள் என்று முழுதும் தெரிந்திருக்கிறாரே சுபாஷ் இவரை போற்ற வேண்டும் பேசாமல் இவரும் பாஜாபாவுடன் சேர்வது நல்லது
பாஜாக ஆதிமூக கூட்டாட்சி தமிழகத்தில் வந்தால்.. இருவருக்குள் போட்டி யாருக்கு அதிக அமிலம் வயிற்றில் சுரக்கும் என்று..
பிளாஸ்டிக் சேரை பிளாஸ்டிக் சேராகவே வைப்பதில் திருமா கை தேர்ந்தவர். பொட்டி வாங்குவதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்.
சென்ற மாதம் வரை அ.தி.மு.க கூட்டணி ஆட்சிக்கு வரவே வராது என உற்சாகமாக இருந்தவர்கள் இப்போதைய டிரெண்டின் படி அ.தி.மு.க உறுதியாக ஆட்சிக்கு வரும் எனத் தெரிந்த பின்னர் அ.தி.மு.க வந்தால் என்ன நடக்கும் என தனக்கு தெரிந்த பொய்யையும், புரட்டையும் கூறி புலம்ப ஆரம்பித்து விட்டனர். இன்னும் பத்து நாட்களுக்கு நல்லா புலம்புங்க, கதறுங்க.
ரவிக்குமார் அல்லது வன்னியரசை வி.சி.க தலைவராக்கும் அத்தனை வேலையையும் முடித்து விட்டது தி.மு.க .இவர் தன் கட்சியில் நடப்பதை மறந்து விட்டு ஊரில் உள்ள கட்சிகளுக்கு ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் பேசாமல் குறி சொல்லும் வேலை பார்க்கலாம் அந்த அளவிற்கு பிஜேபி பயம் ,
தமிழக மக்கள் அனைவரும் திராவிடியார்கள் தவிர அனைவரும் ஊழலற்ற பிரதமர் மோடியை விரும்புகிறார்கள் ...நீங்கள் விரும்பவில்லை என்றால் அது நன்மைக்கு என்று அனைவரும் அறிந்த உண்மை
வாக்காளர் பட்டியலில் சீர் திருத்தம் செய்த பின், 4 முனை போட்டியால் வெற்றியை நிர்ணயிக்க முடியாத நிலையில் திமுக,? மேலும் வாக்கு பதிவு எண்ணிக்கை அதிகம் என்றால், திமுக வெற்றி பெறுவது கடினம். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி மந்திரிசபை அல்லது அண்ணா திமுக ஆட்சி. பிஜேபி ஊழலற்ற கட்சியாக இருப்பதால், உள்ளே வரட்டும் சிறுத்தை. பட்டியல் இன மக்கள் சற்று பயன் பெறுவர். திமுகவுடன் சேர்ந்து அவர்களை மேல் எழ விடாமல் செய்தது போதும். திமுகவிடம் அடங்க மறுத்தால் போதும். கட்சி வளரும்.?மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா