எரியோடு அக்கரைப்பட்டி இடையே பை பாஸ் ரயில் பாதைக்கு ‛சர்வே'
எரியோடு:திண்டுக்கல் நகருக்கு வெளியே பை பாஸ் ரயில் பாதை அமைக்க இறுதி ‛சர்வே' பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தால் ஒரு காலத்தில் நகர் மத்தியில் சென்ற வெளியூர் ரோடுகள் தற்போது பை பாஸ் ரோடுகளாக நகருக்கு வெளியே மாறியுள்ளன. இதனால் அந்த நகருக்குள் செல்ல அவசியமில்லாத வாகனங்கள் பை பாஸ் ரோடுகள் வழியே விரைவாக கடக்கின்றன. இதை போல ரயில்வேயிலும் பல இடங்களில் பைபாஸ் ரயில் பாதைகள் உள்ளன. இதன்மூலம் சில ஜங்ஷன் ஸ்டேஷனுக்குள் சென்று இன்ஜினை திசை மாற்றும் தேவையிராது. குறிப்பாக சரக்கு ரயில்களின் தாமதம் தவிர்க்கப்படும்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சி, தேவையை கருத்தில் கொண்டு தற்போதே மேலும் பல இடங்களில் பை பாஸ் ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டமிடுகிறது. இதன்படி சமீபத்திய பட்ஜெட்டில் பை பாஸ் ரயில் பாதை கணக்கில் திண்டுக்கல் கரூர் பாதையில் எரியோட்டில் இருந்து திண்டுக்கல் பொள்ளாச்சி பாதையில் முதல் ஸ்டேஷனாக இருக்கும் அக்கரைப்பட்டியுடன் இணைக்க 20 கி.மீ., துாரத்திற்கு இறுதி சர்வே நடத்த ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு