தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது ;வில்லிவாக்கம் விஜயகுமார் ஆக்ரோஷ பேச்சு
சென்னை: ''தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன,'' என, வில்லிவாக்கம் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார் உறுதிபட கூறினார்.
வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் விஜயகுமார், வடக்கு, தெற்கு, மேற்கு ஜெகநாதன் நகர், அயனாவரம், சோலை அம்மன் கோவில் தெரு, சபாபதி தெரு, பச்சைக்கல் வீராசாமி குடிசை பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று, தீவிர பிரசாரம் செய்து, ஓட்டு சேகரித்தார். அந்தந்த பகுதிகளில் அவருக்கு, அமோகா வரவேற்பு அளித்து பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.
பிரசாரத்தின்போது, விஜயகுமார் பேசியதாவது:
சட்டசபை தேர்தலுடன் தீய சக்தியான தி.மு.க.,வின் அராஜகத்திற்கு முடிவு கட்டி, வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநில முழுதும் பெண்கள், குழந்தைகள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
தி.மு.க.,வினரால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அ.தி.மு.க., மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்படும். கழக பொதுச்செயலர் பழனிசாமி 200க்கு மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையை நிரூபிப்பார்.
ஊழல் ஆட்சிக்கு எதிராக நடக்கும் இத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு இது சாதாரண வெற்றியாக இருக்காது; மிகப் பெரிய சாதனை வெற்றியாக இருக்கும்.
ஸ்டாலின் கடந்த தேர்தலில் சொல்லியிருந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, மாதந்தோறும் மின் கணக்கீடு வாக்குறுதி அமல்படுத்தவே இல்லை. மேலும் சுமையை கூட்டும் வகையில், மின் கட்டணம் தான் உயர்ந்தது.
தி.மு.க., ஆட்சியில் 24 மணி நேர மது விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கமும் அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்.
எங்களது முதன்மை வாக்குறுதியாக, குடும்பத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு 2,000 ரூபாய், அனைத்து தரப்பினருக்கும் 'அம்மா' வீடு, தரமான பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய், 100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக, ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். கல்லி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மக்களின் நம்பிக்கைக்குரிய ஆட்சியாக, அ.தி.மு.க.,வின் ஆட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் செல்வம், ரஞ்சித் பெர்னான்டோ, மாவட்ட இளைஞர் அணி செயலர் அபிராமி பாலாஜி, பகுதி கழக செயலர்கள் கோகுல், வெங்கசேன், கோதண்டம், நிர்வாகிகள் அப்பாஸ், மகேஷ், வள்ளல் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும்
-
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் 'லீக்' :ரஜினி உட்பட பிரபலங்கள் கண்டனம்
-
காலாவதி 'சாக்லெட்' சாப்பிட்ட 14 மாணவர்கள் 'அட்மிட்'
-
அதிவேகத்தால் நடந்த விபத்து ;டிரைவர், கண்டக்டருக்கு கம்பி
-
விவசாய சங்கம் - தி.மு.க.,வினர் கைகலப்பால் 9 பேருக்கு காயம்
-
அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
-
தேனிலவுக்கு வெளிநாடு பயணம் :வாக்காளர்களுக்கு சீமான் வாக்குறுதி