காலாவதி 'சாக்லெட்' சாப்பிட்ட 14 மாணவர்கள் 'அட்மிட்'
கள்ளக்குறிச்சி: காலாவதியான 'சாக்லேட்' சாப்பிட்ட 14 மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 75 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை, வழக்கம் போல பள்ளிக்கு வந்தபோது, அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் கொடுத்த சாக்லேட்டை, மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில், சாக்கேலட் சாப்பிட்ட மாணவர்களில் சிலருக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடல் ஒவ்வாமை ஏற்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவர் ரோஷித், 10, நான்காம் வகுப்பு மாணவியர் ஸ்ரீதரணி, 9, சஞ்சிதா, 9, வைஷ்ணவி, 9, உட்பட, 14 மாணவ, மாணவியர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்ததில், மாணவர்கள் காலாவதியான சாக்லேட் சாப்பிட்டது தெரிந்தது. இதையடுத்து, சாக்லேட் கொடுத்த பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
களிமண்குண்டில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் அரசு நிதி வீணடிப்பு
-
மக்களின் பிரச்னையை தீர்க்க வருவதே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பெருமிதம்
-
ஹாக்கி வீரர்களின் தேர்தல் விழிப்புணர்வு
-
நாளுக்கு நாள் தொல்லை தாங்கல! விரட்டும் போது கடிக்க வருது
-
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் வரும் அமைச்சர் அன்பரசன் உறுதி
-
முளைப்பாரி ஊர்வலம்