சீனியர் கால்பந்து போட்டி: சிட்டி போலீஸ் அணி தோல்வி
சென்னை: சென்னையில் நடந்த ஆடவர் சீனியர் கால்பந்து போட்டியில், சிட்டி போலீஸ் அணி தோல்வியை தழுவியது.
சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான சீனியர் கால்பந்து போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.
சென்னை ஷெனாய் நகர், பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடந்த போட்டியில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி அணி, சென்னை சிட்டி போலீஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், சிட்டி போலீஸ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து நடந்த அடுத்த போட்டியில், இந்தியன் வங்கி அணி, தாவூத் நினைவு அணியை எதிர்த்து மோதியது. இரு அணிகளுக்கு இடையே போட்டி அனல் பறந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தது. தொடர்ந்து அடுத்த கோல் வாய்ப்பிற்காகவும் வெற்றிக்காகவும் இரு அணிகளும் போராடின. இருப்பினும் எந்த கோலும் அடிக்காமல் போட்டி 1 - 1 என, டிராவில் முடிந்தது.
மேலும்
-
கனவுகளால் கடலை வென்ற பார்வையற்ற பெண்
-
கள் இறக்கும் எளியவர்கள் பயங்கரவாதிகளா? தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேச கேள்வி
-
அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் விழிப்புணர்வு
-
தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
-
எப்போதும் ஏ.சி.யில் இருக்கிறீர்களா? உடனே எலும்பு பரிசோதனை செய்ங்க!
-
புறவழி சாலைக்காக முடக்கப்பட்ட நிலங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு