பழநியில் ஏப்.,22ல் சித்திரை திருவிழா துவக்கம்
பழநி:பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.22ல் துவங்க உள்ளது.
பழநி மேற்கு ரத வீதியில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.,22ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏழாம் நாள் திருவிழாவான ஏப்.28 இரவு 7:29 மணிக்கு திருக்கல்யாணம்,ஒன்பதாம் நாள் விழாவான ஏப்.30 காலை 8:31 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்க மே 1 இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
மேலும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30 ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனம், வள்ளி, தெய்வானை சப்பரத்தில் எழுந்தருள மே 1 சித்ரா பவுர்ணமி அன்று காலை 8:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருதல் நடக்கிறது. அதன் பின் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் , இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் எழுந்தருள ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது .
மேலும்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு