புதுச்சேரி எதிர்காலத்தை வடிமைக்கும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் ;சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிமைக்க ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என, பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டுப் பதிவிற்கு முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டப் பதிவில், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து தங்கள் ஓட்டை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது இளைஞர்களுக்கும், பெண் வாக்காளர்களுக்கும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன். புதுச்சேரியின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு ஓட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என, கூறப்பட்டு இருந்தது.

தமிழ், ஆங்கிலத்தில் பதிவிடப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்கில் வைரலானது.

Advertisement