இளைஞர் மீது தாக்குதல்: தி.மு.க., நிர்வாகி கைது

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டானை சேர்ந்தவர் முத்துக்குமார். நேற்று முன்தினம் மதியம் தளவாய்புரம் மாஞ்சோலை காலனி அருகே டாஸ்மாக் பாரில் மது குடிக்க நண்பர்களுடன் சென்றார்.

பாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பார் உரிமையாளரான தி.மு.க., ஒன்றிய துணை துணை செயலாளர் மலர் மன்னன் 48, இளைஞர்களை தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த முத்துக்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தளவாய்புரம் போலீசார் மலர் மன்னனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement