கால்பந்து: சென்னை ஏமாற்றம்

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 7 வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் எட்மண்ட், ஒரு கோல் அடித்தார். 28வது நிமிடத்தில் யாத்வத், சென்னை அணிக்காக முதல் கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியின் கடைசி 10 நிமிடத்தில் நிலைமை தலை கீழானது.
ஈஸ்ட் பெங்கால் வீரர் விஷ்ணுவிடம் இருந்து பந்தை பெற்ற பிபின், கோல் அடித்தார். போட்டியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+6), ஈஸ்ட் பெங்கால் அணிக்கு நந்தா ஒரு கோல் அடித்தார்.
முடிவில் சென்னை அணி 1-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 7 போட்டியில், ஒரு வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி என, 5 புள்ளிகளுடன் 12வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Advertisement