அத்துமீறி கோவிலில் பேட்டியளித்த த.வெ.க., வேட்பாளர் மீது வழக்கு
வேப்பேரி;அங்காள பரமேஸ்வரி கோவிலில் அத்துமீறி, 'யூ டியூப்' சேனலுக்கு பேட்டியளித்த, எழும்பூர் த.வெ.க., வேட்பாளர் ராஜ்மோகன் உட்பட, 10 பேர் மீது, வேப்பேரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை சூளை பகுதியில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அதிகாரி கங்காதேவி, வேப்பேரி காவல் நிலையத்தில் அளித்த புகார்:
எழும்பூர் த.வெ.க., வேட்பாளர் அத்துமீறி கோவிலில் வைத்து, யூ டியூப் சேனல் ஒன்றுக்கு, பேட்டி அளித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ., பரந்தாமன் குறித்து, அவதுாறாக பேசியுள்ளார்.
எனவே, வேட்பாளர் உட்பட, 10 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
வேப்பேரி போலீசார், அத்துமீறி கோவிலில் வீடியோ பதிவு செய்தது உட்பட, நான்கு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
இதுகுறித்து, த.வெ.கா., வேட்பாளர் ராஜ்மோகனிடம் கேட்டபோது, ''வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்,'' என்றார்.
தி.மு.க., மீது வழக்கு
* ராயபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சுபேர்கான் மற்றும் நிர்வாகிகள், நேற்று முன்தினம் அனுமதியின்றி, மசூதியில் பிரசாரம் செய்ததாக, பறக்கும் படையினர் ராயபுரம் போலீசில் புகார் அளித்தனர். சுபேர்கான் உட்பட ஐந்து நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்