இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல், நேற்று வெளியானது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ல் துவங்கி, கடந்த 6ம் தேதி வரை நடந்தது. தேர்தலில் போட்டியிட, மொத்தம், 7,599 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பல வேட்பாளர்கள், தங்கள் பெயரில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, 7ம் தேதி நடந்தது. மொத்தமாக, 4,645 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற, நேற்று மாலை 3:00 மணி வரை, அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், 500க்கும் மேற்பட்டோர், தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுதும், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement