சிறை காவலர்களுக்கு மிகை நேர ஊதிய உயர்வு 'அம்போ'
* தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில், 500 கைதிகளை அடைக்கும் வகையில் மாவட்ட சிறைச்சாலை அமைக்கப்படும். அதற்கான புதிய கட்டடம் கட்டப்படும்
* அனைத்து மத்திய சிறைகளில் உள்ள பணியாளர் குடியிருப்புகளில், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் 18.90 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும். திட்டம் முழுமை பெறவில்லை
* சிறைத் துறையில், முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, மிகை நேர பணிக்கான ஊதியம், காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கு இணையாக, 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், திட்டம் அமலுக்கு வரவில்லை
* மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகளுக்கு உணவு வினியோகம் செய்ய, மின்சார ஆட்டோ கொள்முதல் செய்யப்படும்
* சேலம் மாவட்டத்தில், 800 கைதிகளை அடைக்கும் வகையில் மாவட்ட சிறை; 100 பெண் கைதிகளை அடைக்க தனி கிளைச்சிறை அடங்கிய வளாகம் அமைக்கப்படும்
* நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்காக, 500 கைதிகளை அடைக்க, நாமக்கல்லில் புதிய மாவட்ட சிறை வளாகம் கட்டப்படும்
* தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையில், கூடுதலாக 300 கைதிகளை அடைக்கும் வகையில் இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துடன் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்
* வேலுார், கோவை, கடலுார், புழல் மத்திய சிறைகளுக்கு, 74 லட்சம் ரூபாயில் அவசரகால ஊர்திகள் வழங்கப்படும்.
மேலும்
-
தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டளித்த ஆசிரியர்கள்: கட்டாயப்படுத்தியதால் அதிருப்தி
-
பள்ளி கட்டடம் சேதம் :தகர செட்டில் வகுப்பறை
-
மேற்கு தொகுதியில் பட்டா பிரச்னைக்கு தீர்வு: வேட்பாளர் பாலாஜியை ஆதரித்து அமைச்சர் மூர்த்தி பிரசாரம்
-
தி.மு.க., ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து சிதம்பரம் பிரசாரம்
-
கழிப்பறை வசதி இல்லா ஓட்டுச்சாவடி
-
மராமத்து பணி துவக்கம்