ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.ஒரு கோடி 'இரிடியம்' மோசடியில் ஒருவர் கைது
மதுரை: 'கோயில் கோபுரம் கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரிடியத்தை விற்ற பணத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா கொண்டு வர ரூ.ஒரு லட்சம் கொடுத்தால் ரூ.ஒரு கோடி தருகிறோம்' எனக்கூறி ரூ.பல கோடி மோசடி செய்த வழக்கில் 'மூளையாக' செயல்பட்ட கோவை ஸ்ரீராம் சுந்தர் 35, என்பவரை மதுரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
'சதுரங்க வேட்டை' பட ஸ்டைலில் மதுரையை மையமாக வைத்து இரிடியம் மோசடி கும்பல் தென்மாவட்டங்களில் பணமோசடியில் ஈடுபட்டு வந்தது. 'கோயில் கோபுர கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இரிடியத்தை ரூ.ஆயிரம் கோடிக்கு விற்று வெளிநாடு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதை ரிசர்வ் வங்கி வழியாக இந்தியாவுக்கு கொண்டு வர பணம் தேவைப்படுகிறது.
ரூ.ஒரு லட்சம் தந்தால் ரூ.ஒரு கோடி தருவோம்' எனக்கூறி பலரிடம் லட்சக்கணக்கில் அக்கும்பல் பணம் பெற்றது. அவர்களை நம்ப வைக்க மும்பை ரிசர்வ் வங்கிக்கு அழைத்துச்சென்று, அலுவலக வாசலில் அவர்களை காத்திருக்க வைத்துவிட்டு, மோசடி கும்பல் உள்ளே செல்வது போல் சென்று 'அப்பாயின்மென்ட்' கிடைக்கவில்லை. ஆனால் பணம் பரிவர்த்தனைக்கான ஆவணங்கள் வாங்கிவிட்டோம்' எனக்கூறி போலி ஆவணங்களை காண்பித்து நம்ப வைத்தது.
இந்த மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மதுரை சி.பி.சி.ஐ.டி., திண்டுக்கல், சென்னை, வேலுார், மதுரையைச் சேர்ந்த 54 பேரை கடந்தாண்டு கைது செய்தது. இதன்தொடர்ச்சியாக மோசடிக்கு 'மூளையாக' செயல்பட்ட கோவையைச் சேர்ந்த ஸ்ரீராம் சுந்தர் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு