ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

கூவத்துார்: லத்துார் ஒன்றியத்தில் ஓட்டு சதவீதத்தை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

லத்துார் ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கடந்த சட்டசபை தேர்தலில், கூவத்துார் மற்றும் கடலுார் ஊராட்சிகளில் அதிகளவில் வாக்காளர்கள் இருந்தும் குறைவான ஓட்டுகளே பதிவாகின.

அதையடுத்து கலெக்டர், இந்த இரண்டு ஊராட்சிகளிலும் தேர்தல் விழிப்புணர்வில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துக்கு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பவுஞ்சூரில் உள்ள மகளிர் திட்ட துறை மூலம், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் கடலுார் ஊராட்சியிலும், கடந்த வாரம் கூவத்துார் ஊராட்சியிலும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அதில், மகளிர் குழுக்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement