பைக் விபத்தில் வாலிபர் பலி

செய்யூர்: நாய் மீது இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சாரதி 23; நேற்று மாலை 4:00 மணிக்கு தன் டி.வி.எஸ்., என்டார்க் இருசக்கர வாகனத்தில் தன் நண்பர்களான தீபக், 23 மற்றும் கவுதம், 22, ஆகியோரை ஏற்றிக்கொண்டு, சித்தாமூரில் இருந்து புத்திரன்கோட்டை நோக்கி சென்றார்.

நுகும்பல் கிராமத்தில் வேகமாக சென்று கொண்டு இருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனம் நாய் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

அருகே இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சாரதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சித்தாமூர் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement