சமரச நாள் ஊர்வலம்

திருப்பூர் மாவட்ட சமரச மையம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.


மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமை வகித்து, ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். நீதிபதிகள் பத்மா, செல்லதுரை, மோகனவள்ளி, சுந்தரம், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக, சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமரச மைய செயலாளர் சந்தோஷ் சமரச நாள் குறித்தும், நீதிபதி மோகனவள்ளி மையத்தின் நோக்கம் குறித்தும் சிறப்புரையாற்றினர். நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் தென்னம்பாளையம் வரை சென்றது. இதில் வக்கீல்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement