ஓட்டுச்சாவடி பொருட்கள் வருகை
திருப்பூர்: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளில் உள்ள 2,822 வாக்குச்சாவடிகளுக்கான தேர்தல் பொருட்கள் வந்து சேர்ந்துள்ளன.
வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பெயர்ப் பலகைகள், அலுவலர்களுக்கான அடையாள அட்டைகள், படிவங்கள் மற்றும் கவர்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ஓட்டுச்சீட்டுகள் ஆகியவை நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன. இவை உடனுக்குடன் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
விரைவில், வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை மற்றும் மின்னணு இயந்திரங்களை மறைத்து வைக்கும் அட்டைகள் வரவுள்ளன.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடம் இப்பொருட்கள் ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். முன்னதாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு