நோயை வேரோடு அகற்றும்ஹோமியோபதி
புதிது புதிதாய் நோய்கள் உருவாகும் இன்றைய சூழலில், ஹோமியோபதி மருத்துவ முறை அளப்பரிய பங்காற்றி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள இச்சிகிச்சை முறையை நம் நாட்டில்தான் அதிக மக்கள் பின்பற்றுகின்றனர். மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப். 10-ல் உலக ஹோமியோபதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டாக்டர் ராகிலா, சேவூர், அவிநாசி: ஹோமியோபதி என்பது முழுமையான மற்றும் இயற்கையான சிகிச்சை முறை. மூலிகைகளால் மருந்துகள் தயாரிக்கப்படுவதால் பக்கவிளைவுகள் கிடையாது. சளி, காய்ச்சல் முதல் ஒற்றைத் தலைவலி, தோல் நோய்கள், பெண்களின் பிரச்னைகள் மற்றும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
ஹோமியோபதி மெதுவாகச் செயல்படும் என்பது தவறான கருத்து. அவசர கால பாதிப்புகளுக்கு இது விரைவாகப் பலன் தரும். நாள்பட்ட நோய்களுக்குப் பூரண தீர்வு காண மட்டுமே கூடுதல் காலம் தேவைப்படும். வெளிப்புற அறிகுறிகளை மட்டும் நீக்காமல், நோயை வேரிலிருந்து குணப்படுத்தி நிரந்தரத் தீர்வு காண்பதே இதன் தனிச்சிறப்பு.
டாக்டர் வரலட்சுமி, திருப்பூர்: ஹோமியோபதி நோயை விட நோயாளியை மையமாகக் கொண்ட தனித்துவமான முறை. ஒவ்வொருவரின் உடல்வாகு, மனநிலை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன. இம்மருந்துகளில் 'ஸ்டெராய்டுகள்' இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு. இவை இயற்கை தாதுக்களிலிருந்து தயாரிக்கப்படுபவை என்பதால் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை அனைவரும் பாதுகாப்பாக உட்கொள்ளலாம்.
அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று கருதப்படும் பல நோய்களுக்கு ஹோமியோபதியில் எளிமையான தீர்வுகள் உண்டு. மத்திய அரசின் 'ஆயுஷ்' அமைச்சக அங்கீகாரத்துடன் இது செயல்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு மட்டுமின்றி குழந்தையின்மை போன்ற தீவிர பாதிப்புகளுக்கும் இதில் சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
- இன்று உலக ேஹாமியோபதி தினம்.
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்