மாநில முதல்வர்கள் முட்டிக்கொள்ளும் முதல் தேர்தல்: புது ‛‛டிரெண்ட்'' பேச்சு; நாகரீகம் போச்சு!!
நமது சிறப்பு நிருபர்
இதற்கு முன் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் மாநில முதல்வர்களே வெளிப்படையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தால் அம்மாநில முதல்வர் வேட்பாளராக இருப்பவர், எதிர்க்கட்சியாக இருந்தால் மத்தியில் ஆளுங்கட்சி அல்லது பிரதமரை விமர்சிப்பார். அதே போல், பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு பிரசாரத்திற்கு சென்று அம்மாநில எதிர்க்கட்சி முதல்வர் வேட்பாளராக இருப்பவரை விமர்சிப்பார்கள். மற்றபடி ஒரு மாநில முதல்வர், தேர்தல் நடக்கும் மாநில முதல்வரை விமர்சிக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் இம்முறை, இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த சபை நாகரீகத்தை உடைத்து விட்டார்கள்.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், எப்போதும் சர்ச்சைக்கு பெயர்போன மேற்கு வங்க முதல்வர் மம்தா தான். சட்டமன்ற தேர்தல் நடக்கும் தமிழ்நாட்டில் திமுக உடன் பாஜ, காங்., ஆகிய கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்துள்ளன என்று ஆரம்பித்து, இங்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். இந்த புது ‛‛டிரெண்ட்'' பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மம்தா காட்டிய வழி ஸ்டாலினுக்கும் பிடித்து விட்டது போல. மதுரை மத்தியில் பாஜ சார்பில் போட்டியிடும் ராமசீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்த போது உடன் கலந்துகொண்ட மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் ‛‛பாஜ எம்எல்ஏக்களை தேர்வு செய்தால் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்'' என்று கொளுத்திப் போட்டார். அது அப்படியே பற்றிக்கொண்டது.
உடனே பதில் சொல்லிய தமிழக முதல்வர், ‛‛மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவதற்கு மகாராஷ்டிரா முதல்வர் பிளாக் மெயில் செய்கிறார்'' என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டார். இந்த ‛‛டிரெண்ட்'' பக்கத்து மாநிலத்திற்கும் பரவியது. கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் அங்கு காங்., சார்பில் பிரசாரம் செய்வதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்றிருந்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "கேரளா கம்யூனிஸ்ட் அரசு கேரளாவுக்கு என்னதான் வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது? கண்ணூர் என்பது கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டம். அங்குள்ள பல கட்சித் தொண்டர்களிடம் நான் பேசினேன். இந்த மாவட்டத்துக்கு ஏதேனும் சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் வந்துள்ளனவா என்று நான் அவர்களிடம் கேட்டேன். இந்த மாவட்டத்துக்காக எதுவும் செய்யப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
முதல்வரின் சொந்த மாவட்டமே வளர்ச்சியடையாத நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்" என்று கூறினார். தங்கள் மாநில முதல்வரைப் பற்றி இன்னொரு மாநில துணை முதல்வர் விமர்சனம் செய்தது கேரளாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக புதுப்புது டிரெண்ட்டுகளை இந்த தேர்தல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என்று திருவாளர் பொதுஜனம் திகைத்துப் போய் நிற்கிறார்.
அதற்கு என்ன செய்வது திராவிட மாடல் அரசின் முதல்வர் ஹிந்தியை எதிர்ப்பவர் வடக்கே சென்றால் எல்லா மாநிலங்களிலும் முதல்வரோ அல்லது எதிர்கட்சிக்காரர்களோ ஹிந்தி பேசுபவர்களாத்தான் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் ஹிந்திக்கு எதிரி அல்ல ஆனால் நமது முதல்வரோ ஹிந்தியும் வேண்டாம் அவர்களும் வேண்டாம் என்பார் இவருக்கு வேண்டியவர்கள் எல்லாமே திராவிட கட்சி வீரமணி ஜெகவீரபாண்டியன் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இருந்தால் போதும் எல்லாமே ஓசி சோறு என்று முன்பே அழகிரி சொல்லியிருக்கிறார்
நைஸ் நியூஸ் பேப்பர் .டெல்லஸ் எல்வேஸ் கரெக்ட் நியூஸ் .இ பெர்சோனால்லி லிகேசத்தில் NewsPaper.
அடச்சே இந்த 200 ரூபா உபிஸை வைத்துக்கொண்டு திமுக வினர் எல்லா செய்தியிலும், கருத்து சொல்றேன் என்ற போர்வையில், வயித்தை பரட்டி வாந்தி வருகிறமாதிரி திரும்பத் திரும்ப ஒரே மாதிரி, ஸ்டாலினும் அவரது அரசும் வானத்திலிருந்து வந்த சுத்தமான தேவர்கள் போல சித்தரித்து எழுதுவது தாங்க முடியலடா சாமி உளறல் திலகத்துக்கு எவ்வளவு பெரிய முட்டு குடுக்குறாங்கய்யா? தகுதியான ஆளுக்கு முட்டு குடுங்க
Nothing Wrong in Informal Arguments& Counters
இதில் என்ன பெரிய ஆச்சரியம்
அய்யா ....
செட்டிநாடு காரைக்குடியில் 60வருடங்களாக வசித்துவருபவன். மதுரையை பற்றி நன்கு தெரிந்தவன் என்ற முறையில் மெட்ரோ ரயில் பற்றி சொந்த கருத்துக்களை முன் வைக்கிறேன்.
மதுரை மண்வளம் கரிசல் பூமி. மழை பெய்தால் தண்ணீர் உறிஞ்ச அழாத பூமி. அண்ணலும் 20 முதல் 40 அடிகளுக்கு கீழாக கருங்கல் பாறை உடைய பூமி. மதுரை நகருக்கு உள்ளாக பல கண்மாய்களும் தெப்பங்களும் இருந்தன.
இதில் முக்கிய பிரச்சினை வைகை நதி மதுரை மாநகரின் இடையில் செல்வது.
விவசாயக்கல்லூரி முதல் மதுரை காரசார பல்கலைக்கழகம் வரை ஒரு பாதை..மற்றது சாத்திரக்குடியில் இருந்து மதுரை ஏர்போர்ட் வரை செல்லும் மெட்ரோ பாதை. இரண்டுமே பெரியார் பேருந்து சந்திக்கலாம்.
இதில் அழகர் வரும் பாதையும் மீனாட்சி தேர் செல்லும் பாதயும் எப்படி விளக்கி வைக்க இயலும்.
வைகையில் மெட்ரோ ரயில் உயரத்தில் சென்று ஆகவேண்டிய கட்டாயம்.
2026 பதவி ஏற்கும் தமிழக அரசு மதுரை ஆயர் ஒருவரை நியமனம் செய்த்து ரயில் செல்லும் பாதைகளை முடிவு செய்யவேண்டும்.
நாம ஒரிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று சொல்லி வாக்கு கேட்டதை விடவா அதிகம் செய்துவிடமுடியும் ?? பீகாரில் தமிழ்நாட்டில் பீகாரிகளை கொல்கிறார்கள் என்று சொல்லி வாக்கு கேட்டதை விடவா அதிகம் செய்துவிடமுடியும் ?? ட்ரெண்ட் என்றால் அது தான் புது வகை ட்ரெண்ட். பெரியவர்கள் கற்றுக்கொடுப்பதை சிறியவர்கள் அப்படியே செய்கிறார்கள்.
மம்தா தமிழகம் வந்து பிரசாரம் செய்து அவருடைய அந்த கருத்தை சொல்லவில்லை. எனவே மம்தாவை இந்த குஸ்தியில் சேர்க்கவேண்டாம். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் செய்தது அழுகுண்ணி பிரச்சாரம். திமுகவுக்கு நல்லது செய்துவிட்டு போய் இருக்கிறார். பட்னவிஸ் பேசியது சரியா என்பதை மனசாட்சி உள்ளோரிடம் விட்டுவிடுகிறேன். கேரளத்து கலாட்டா நமக்கு எதற்கு ??? அங்கு யார் எப்படி குஸ்தி போட்டுகொண்டாள் நமக்கு ன்ன ஆச்சு ??? நாம் தார்மீகத்துக்கெல்லாம் முழு குத்தகையா எடுத்துவைத்துள்ளோம் ??
உள்நோக்கதுடன் வேண்டுமென்றே குறைபாடுகளுடன் கோவை மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை டெல்லிக்கு அனுப்பிவிட்டு அது திருப்பியனுப்பபட்டவுடன் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என நாடகமாடினார் திராவிஷ மாடல் முதல்வர். மத்திய அரசு திருப்பியனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தால் ஸ்டாலினின் நாடகம் பிசுபிசுத்துப் போயிருக்கும். பிஜெபி க்கு பிழைக்கத் தெரியவில்லை.
யாரவது குறை என்று தெரிந்து திட்ட வரையீடை அனுப்புவார்களா ?? சரி அப்படியே அனுப்பி இருந்தால் எது தவறோ அதை சரி செய்து தருமாறு திருப்பி அனுப்புவார்களா இல்லை அப்படியே ரிஜெக்ட் செய்து அனுப்பிவிடுவார்களா ?? திட்ட வரையீடு தவறு என்ற காரணத்துக்காக இது போல ரிஜெக்ட் செய்து அனுப்பியதற்கு முன்னுதாரணம் இருக்கா ?? ஆக்ரா பாட்னா மற்றும் போபால் மெட்ரோ ரயில் ஒப்புதல் எப்படி தந்தார்கள் ?? மக்கள் தொகை மதுரை மற்றும் கோவையை விட அங்கு கூடுதலா இல்லை குறைவானதா ?? இது போன்று மெட்ரோ ரயில் கோரிக்கைகள் வேறு எங்கு இதே காரணங்களுக்காக ரிஜெக்ட் செய்யப்பட்டது ??
மத்திய அரசு நிராகரிக்கவில்லையே . விளக்கங்களை கேட்டு திருப்பியனுப்பியுள்ளார்கள் . நிராகரிப்பு என்பது வடிகட்டிய பீலா.
18. 11. 2025 நாளிதழ்களை படிக்கவும். அதில் மெட்ரோ ரயில் திட்டம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை மட்டுமே உள்ளதினால் ரிஜெக்ட் செய்யப்பட்டன என்று தான் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு 14. 11. 2025 தேதியிட்டு அனுப்பப்பட்ட ஒன்றியவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக கடிதத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீங்களே சொல்லுங்க எது பீலா என்று .
தமிழக திமுகவினரின் லட்சணம் மற்ற மாநிலங்களில் தெரியட்டுமே , மக்களை எப்படியெல்லாம் கெடுத்து குட்டி சுவர் ஆக்கிய திமுகவின் மானம் போவட்டும்
This term is the last chance for Stalin to be CM of Tamilnadu. That is why The CMs of BJP ruled States are coming to TN to Say Goodbye to Stalin. The NDA-AIDMK will WIN this Assembly election and form the Government in Tamil Nadu in May 2026.மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!