கேள்வி கேட்டவரை 'லூசு' என திட்டிய திமுக வேட்பாளர்; அண்ணாமலை கண்டனம்
சென்னை: தங்கள் தொகுதி பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை இழிவாக பேசிய மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; கிட்னி திருட்டு புகழ் மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன், தேர்தல் பிரசாரத்தின் போது, தங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர் இல்லை என்று கோரிக்கை வைத்த கிராம மக்களை, லூசு என்றும், நீ ஒன்றும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் இழிவாகப் பேசியிருக்கிறார்.
வழக்கமாக, தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள். ஆனால், தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை.
ஐந்து ஆண்டுகளாக அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுக எம்எல்ஏ கதிரவனுக்கு, தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால், ஏரியைச் சீரமைக்க முடியவில்லையாம். ஐந்து ஆண்டுகளாக அவரது தந்தைக்கு 15 கோடியில் வெளிநாட்டு கார் வாங்க உழைத்துக் கொண்டிருந்தவருக்கு, வாக்களித்த மக்களைப் பற்றிச் சிந்திக்க ஏது நேரம்?
திமுக எம்எல்ஏவின் திமிருக்கும், ஆணவத்திற்கும், மணச்சநல்லூர் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் சரியான பதிலளிப்பார்கள், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
-
ஆட்டு வியாபாரியிடம் ரூ. 69,400 பறிமுதல்
-
அரசு திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரிக்க வேப்பனஹள்ளி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்