பாஜவுக்கு தொடர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க; ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
நமது நிருபர்
''பாஜவுக்கு தொர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க. உங்களுக்கு வந்தாலும் டெலிட் செய்யுங்கள். தியேட்டர் போய் தான் பார்ப்பேன்'' என ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சமூக வலைதளத்தில் முழு திரைப்படமும் வெளியாகி உள்ளது. திட்டமிட்டு கசிய விடப்பட்டதா அல்லது யாரேனும் திருட்டுத்தனமாக வெளியிட்டனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகன் லீக் விவகாரம் குறித்து கோவையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இது ரொம்ப தப்பு. போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோதான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். காரணம் லீக் ஆகி இருக்கு 3, 4 நிமிடம் படம். சிலர் முழு படம் என்று சொல்கின்றனர். நான் தேர்தலுக்கு பிறகு, ஜனநாயகன் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பேன். ஆதவ் அர்ஜூனா தேவையில்லாமல் பாஜவையும், மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரையும் இழுக்கிறார்.
தியேட்டரில் பார்ப்பேன்
நான் விஜயின் ஜனநாயகன் படம் எப்பொழுது ரீலிஸ் ஆகிறதோ, ரசிகனாக தியேட்டரில் போய் பார்ப்பேன். அதையும் அரசியலையும் குழப்ப கூடாது. பாஜ கட்சியில் பொறுப்பில் இருக்க கூடிய மனிதன், தொண்டனாக இருக்கேன், சில இடங்களில் தலைவனாகவும் இருக்கேன்.
தயவு செய்து பொதுமக்கள் யாரும், இந்த மாதிரி வீடியோவில் படம் வந்தாலும் பார்க்காதீங்க, அது எத்தனையோ பேரின் உழைப்பு. எத்தனையோ பேரின் ரத்தம், வியர்வை, புரொடக்ஷன் கம்பெனியின் பணம். வந்தாலும் கூட skip செய்துவிட்டு போய்விடுங்கள்.
முட்டிக்கு முட்டி தட்டுங்கள்
யாரும் அந்த வீடியோவை அனுப்பினாலும் பார்க்காதீர்கள். தவெக தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரை இழுக்க கூடாது. அது அரசியல் அநாகரிகம். நீங்கள் யார் தப்பு செய்தார்களோ, போலீசில் புகார் கொடுத்து அவர்களை உள்ளே கொண்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள். அரசியல் லாபத்திற்காக ஏன் தேவையில்லாமல் பாஜவை இழுக்கிறீர்கள். பாஜ எத்தனை இடத்தில் அரசியல் செய்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
லீக் ஆனது இருக்கட்டும். படம் வெளிவராமல் தடுத்ததே பா.ஜ ஆளுங்கதான்.
எதுக்கு தான் நீங்கள் ஒத்து கொள்ளுவீர்கள் சொல்லுங்கள்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அண்ணாமலை சொல்லிவிட்டார்
எலெக்ஷனுக்காகவே எடுத்தப்படம் .எலெக்ஷனுக்கு முன்னாடி ஓடலைன்னா அப்புறம் ஓட வழி இ ல்லை
பாஜகவுக்கு தொடர்பில்லையாம். டாடி குதிருக்குள்ளே நஹி ஹைங் ஜீ.
திருட்டுத்தனமாக வெளியிட்ட அய்யோக்கியன் ஆதாரம் வீடியோ கிடைத்தால் வெளியிடுங்கள். உங்களால் முடியும். Uthavunkal.
டிக்கெட் விலையை நியாயமாக வைக்கவும். பாப்கான் விலை முன்னூறு மட்டும் நியாயமா ?. நடிகனுக்கு வந்தா ரத்தம் மக்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா ?. யாரும் தியேட்டருக்கு போய் பார்க்காதீர்கள் . டீ வியில் வந்தா பார்த்துக்கொள்வோம் . இவர்கள் கொட்டம் அடங்கட்டும். வேஷங்கட்டி ஆடும் கழைக்கூத்தாடிகளை , நகல்களை நிஜமாக நம்பும் அப்பாவிகள் திருந்தட்டும் .
ஆதவ் அர்ஜுனா வே இதை செய்திருக்கலாம்.
வெளிநாட்டு சதிவேலை என்று கூட சொல்லலாம்.
முரசொலி மூளைகளுக்கு சிந்திக்கும் திறன் அதாவது IQ லெவல் எவ்வளவு என்பதை இந்த சித்திவிநாயகம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சரியாக சொன்னீர்கள்
திரு.அண்ணாமலை உங்கள் மேலே அபரிதமான மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. ஆனால் உங்கள் கடசியில் நிறைய புல்லுருவியும், நமிக்கை துரோகியும் இருக்கிறார்கள். உங்கள் விஷயத்தில் நடந்துகொண்டுயிருக்கிறது. நீங்கள் அறியாது இல்லை?. அதனால் பிஜேபி க்கு மிகப்பெரிய பாதிப்பு. எனவே அவர்களுக்கான வக்காலத்து வாங்காதீங்க. முடிந்தால் உதவி செய்து படத்தை வெளிக்கொண்டு வாரும். வீடியோ கிடைத்தால் பகிருங்கள்.
இப்போ இருக்கா ?
த வெ க வே ரிலீஸ் செய்து விட்டு பழி போடுகிறார்கள் திமுக வின் அனைத்து அம்சங்களும் கொண்ட கட்சிதான் த வெ க
நீங்க அபாண்டமா த வெ க மேல குற்றம் சுமத்துறீங்க.மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு