மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதா?: உண்மை என்ன?: திமுக வயிற்றில் ‛‛புளி''யை கரைக்கும் புள்ளி விபரம்
நமது சிறப்பு நிருபர்
கூட்டத்திற்கு கூட்டம் ‛‛மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‛‛பியூஸ் கோயல் அவர்களே, பாஜ ஆளும் மாநிலங்களைப் பாருங்க. அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்திருக்கீங்க. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கொடுத்திருக்கீங்க. அப்போ தான் தமிழ்நாட்டை நீங்கள் எவ்வளவு வஞ்சிக்கிறீங்கன்னு தெளிவா புரியும்.
தமிழ்நாட்டு கடன் பத்தி பேசி இருக்கீங்களே. இன்று உங்களுக்கு ஒரு சேலஞ்ச் பண்றேன். தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுக்கிற ஒரு ரூபாய்க்குப் பதிலா திரும்ப எங்களுக்கு எவ்வளவு கிடைக்குது. அதுவே பாஜ ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்குது.
இந்த கம்பேரிசனை வெளிப்படையா அறிவிக்க உங்களால் முடியுமா. சொன்னா உங்க குட்டு வெளிப்பட்டு விடும்'' என்றார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? மத்திய வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கொடுப்பார்கள் என்ற தகவல் பொதுவெளியிலேயே கிடைக்கிறது.
1989-1995ல் 9வது நிதி கமிஷனின்போது தமிழகத்திற்கு 7.931%, 1995-2000ம் வரை 10வது நிதி கமிஷனின் போது 6.637%, 2000-2005ல் 11வது நிதி கமிஷனின் போது 5.385%, 2005-2010ல் 12வது நிதி கமிஷனின் போது 5.305% 2010-2015ல் 4.696%, 2015-2020ல் 14வது நிதி கமிஷனின் போது 4.023%, 2021-2026ல் 4.079% தரப்பட்டுள்ளது. 2026-27 நிதி ஆண்டுக்கு தமிழகத்திற்கு ரூ.87 ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர்.
பாஜ ஆளும் மாநிலமாக இருந்தாலும் உ.பி., ஒரு பின் தங்கிய மாநிலம். அதற்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 4.09% நிதி பகிர்வு தரப்பட்டுள்ளது. உ.பி.,க்கு 17.6% தரப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது ஸ்டாலின் சொல்வது சரி என்பது போல் தெரியும்.
ஆனால் மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகள் திமுக அங்கம் வகிக்கும்போது தமிழகத்திற்கு எவ்வளவு தரப்பட்டது. அப்போது தமிழகத்திற்கு 2013-14 நிதி ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 600 கோடி தரப்பட்டது. அதுவே உ.பி.,க்கு ரூ.94 ஆயிரத்து 500 கோடி தரப்பட்டது. அதாவது தமிழகத்திற்கு 4.9%, உ.பி.,க்கு 19.6% தரப்பட்டது.
காங்., உடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிகமாக உ.பி.,க்கு நிதி தரப்பட்டுள்ளது. இப்போது மத்திய அரசை குற்றம் சுமத்தும் திமுக, அப்போது என்ன செய்துகொண்டு இருந்தது. அன்று உ.பி.,.க்கு கொடுத்தது அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.
இன்னும் சொல்லப் போனால் அப்போது கொடுக்கப்பட்டதை விட இப்போது உ.பி.,க்கு குறைவாகத் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வு என்பது மக்கள் தொகை அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. ஆனால் தங்களுக்கு வசதியாக இந்த விஷயத்தை திமுக மறைத்து விடுகிறது.
தமிழகத்தை விட உ.பி., மக்கள் தொகை 3 மடங்கு அதிகம். இது பற்றி மேடையில் திமுக தலைவர்கள் மூச்சே விடுவதில்லை. 2026-31க்கான நிதி கமிஷனில் உ.பி.,க்கு 17.62%, பீகாருக்கு 9.95%, மேற்கு வங்கத்திற்கு 7.22% நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது. இதில் நாட்டிலேயே அதிக நிதி பகிர்வில் மேற்கு வங்கம் 3ம் இடம் பிடித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பது பாஜவை கடுமையாக எதிர்த்துக்கொண்டு இருக்கும் மம்தா அரசு. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜ அரசு ஓர வஞ்சனை செய்வதாக இருந்தால் மேற்கு வங்க அரசுக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும். பின் தங்கிய மாநிலங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் நோக்கமே தவிர, இதில் எந்த அரசியலும் இல்லை என்பதை இதை வைத்தே புரிந்துகொள்ளலாம்.
இன்னொரு முக்கிய புள்ளி விபரத்தை சொன்னால் இன்னும் கொஞ்சம் புரியும். இதே நிதி கமிஷனில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பகிர்வு 4.10%. குஜராத்திற்கு ஒதுக்கப்பட்டது 3.76% மட்டுமே. அதாவது, பாஜ ஆளும் குஜராத்திற்கு தமிழகத்தை விட குறைவாக நிதி பகிர்வு செய்யப்படுகிறது.
உண்மையில் மத்திய பாஜ அரசு ஓர வஞ்சனையுடன் நடந்துகொண்டு இருந்தால், எதிர்க்கட்சியான திமுக ஆளும் தமிழகத்தை விட குறைவாக தங்கள் கட்சி ஆளும் குஜராத்திற்கு எப்படி நிதியை ஒதுக்கும். இதில் இருந்தே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலத்திற்கு குறைவாகவும் அதை விட பின் தங்கிய மாநிலத்திற்கு அதிகமாகவும் நிதி பகிர்வு தரப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
திருட்டு திராவிடம் என்ற பெயருகேர்ப்ப தான் தலைவரின் பேச்சு இருக்கும். நேரமாய்ய்ய அவர்களுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று. வாயிலிருந்தும் வரும் வார்தைகள் எல்லாமெ புளுகு புளுகு அது மட்டும் தான் காத்தோடு மற்ற வழியிலும் வெளியேறும் வெளிவரும். தூர நின்று தான் பார்க்க வேண்டும்.
எதுக்கு கொடுக்கணும் கோவால் புரா கொள்ளை கூட்ட திருட்டு திராவிட குடும்பம் தமிழன் பெயரை சொல்லி ஒட்டு மொத்தமா புறங்கை நக்கவா....
ஒரு சில திராவிடர்கள் வாழ மொத்த தமிழினத்தின் மீதும் சேற்றை அடிப்பது கேவலமான அணுகுமுறை.
ஒரே ஒருவர் ஒரு முறை மட்டும் சொல்லிவிட்டு விட்டு விட்டால் அது மக்களை சென்று சேராது. ஒட்டு சேகரிக்கும் பொழுது கூட்டணி கட்சிகள் அனைத்தும் பிரச்சாரத்தின் பொழுது மக்கள் மனதில் சேரும் வரை கூறி ஓட்டாக மாற்றப்படவேண்டும். அது நடப்பதாக தெரியவில்லை.
கொழுகொழு பிள்ளைக்கு டயட் ஆகாரம்தான். சவலை பிள்ளைக்குத்தான் ஊட்டச்சத்து மிக்க அதிக உணவு கொடுப்பது வழக்கம். வளர்ந்த மாநிலம் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
அதற்காக வளர்ந்த பிள்ளையை சவலை பிள்ளை ஆக்க முயற்சிப்பது நல்லது அல்ல. மேலும் தமிழ் நாடு முன்னேறியுள்ளது பிஜேபி யினால் அல்ல. திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான் என்பதை ஏற்று கொண்டதற்கு நன்றி.
தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக புரியுது மேலும் தெரியுது. மத்திய அரசு தமிழ் நாட்டில் எவ்வளவு வசூல் பண்ணுகிறீர்கள் , திரும்ப எவ்வளவு கொடுக்கிறீர்கள்.
தமிழ் நாட்டில் புயல் தாக்கியபோது , மிக குறைவான நிதியை , காலம் கடந்து கொடுத்தீர்கள். ஆனால் குஜராத்தில் புயல் வந்தபோது , மத்திய அரசு உடனே சென்று பார்த்தது மட்டுமில்லாமள் , பெரிய நிவாரண தொகையை உடனே வழங்குனீர்கள் . இதை என்னவென்று சொல்வது
tiruvarur திருடர்களுக்கு மத்திய அரசு பணம் தராது
ஓம் சக்தி பரா சக்தி திமுக ஒரு தீய சக்தி.
பாஜக அதன் கூட்டணியையும் திமுக வெல்லும்.
ஒன்றியம், ஆரியம், சங்கிகள் என்றெல்லாம் சொல்லி திசை திருப்பி தமிழகத்தைச் சுரண்டிக்கொழுத்து மீண்டும் வந்து ஓட்டுக் கேட்க சார்கள் முன்னேற்றக் கழகத்தால்தான் முடியும் .......
தீய மு கா என்பது பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்ந்து தமிழ் நாட்டை போயுரை கூறி வஞ்சிக்கும் கழகம். தற்சமயம் குடும்ப கொள்ளையால் வயிறு வீங்கி வெடிக்கும் நிலையய்க்கு வந்து உள்ளது. தமிழ் நாட்டை காக்க மக்களெ ஒட்டு என்றாகிய ஊசியால் குத்தி வயிறை வெடிக்க செய்யுங்கள்.
மிக சரியான புள்ளிவிபரம். இதை அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு சரியாக விளக்காததால் தான், தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற பொய் பிரச்சாரம் பிரபலமாக உள்ளது. பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவது, தலித் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை போன்றதே.
ஸ்டாலின் இது எடுபடாது.
ருட்ட மாத்துமேலும்
-
ஆந்திராவில் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்க முடிவு
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி
-
நுாற்றாண்டைக் கடந்த புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மக்களின் நன்மதிப்புடன் திண்டிவனத்தின் அடையாளமாக திகழ்கிறது
-
மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க.,வினர் மீது புகார்
-
தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால்...: திருமாவளவன் சொல்வது இதுதான்
-
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புங்கள்; பா.ம.க., வேட்பாளர் ஆவேசம்