ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
பாட்னா: 'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் இன்று (ஏப்ரல் 10) ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.




'எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., லோக்சபா எம்.பி., என, பல்வேறு பதவிகளை வகித்து விட்டேன். ராஜ்ய சபா எம்.பி.,யாக இதுவரை பதவி வகித்தது இல்லை. அதன் காரணமாகவே டில்லி அரசியலை நோக்கி பயணிக்க உள்ளேன்' என, நிதிஷ் குமார் காரணம் தெரிவித்தார்.
பதவியேற்பு
இந்தச் சூழலில், ராஜ்ய சபா எம்.பி.,யாக இன்று அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனால், பீஹார் முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகுவது முடிவாகிவிட்டது. வரும் 14ம் தேதி அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் முறைப்படி வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுக்கு வருகிறது
இதற்கிடையே, முதல்வர் பதவியை உடனடியாக நிரப்புமாறு பா.ஜ., மேலிடத்திடம் நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய துணை முதல்வரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்க பாஜ தலைமை விரும்புகிறது. ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்று உள்ளதால், 20 ஆண்டுகளுக்கு மேலான அவரது மாநில அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது.
இது ஒண்ணும் அறிவாலய மடம் அல்ல. குடும்ப சொத்து அல்ல
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பது இது தானா?
சூப்பர் அரசியல் சட்டம்
புல்லரிக்கிது.
கமலுக்கு தரும்போது புல்லரிகளையா அப்பாவி