அவசியம் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதில் விழிப்புணர்வு அலட்சியத்தால் 4 தடுப்பூசிகளை செலுத்தாத அவலம்

பெரியகுளம்;நாய், பூனை, பெருச்சாலி கடிபட்டவர்கள் உரிய நேரத்தில் நான்கு ரேபிஸ் தடுப்பூசிகளை முறையாக செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 4 வது டோஸ் செலுத்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலர் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இல்லாததால் பல மாதங்கள், ஆண்டுகள் கடந்து நோய் பரவல் ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவசியம் எழுந்துள்ளது.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாதம் 30 முதல் 40 பேர் நாய், பூனை, பெருச்சாலிகளால் கடிபட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். பாதிக்கப்படுவோர் ரேபிஸ் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். தடுப்பூசி செலுத்தியவுடன், 3 வது நாள் 2 வது டோஸ், 7 வது நாள் 3 வது டோஸ், 28 வது நாள் 4 வது டோஸ் செலுத்த வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தும் போதே பாதிக்கப்ட்டோரின் பெயர், முகவரி, அலைபேசி எண் பதிவு செய்யப்படுகிறது. அடுத்தடுத்த தடுப்பூசிகள் விடுபடாமல் செலுத்துவதற்கு அறிவுறுத்தியும், அலைபேசி மூலம் முன்னறிவிப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் முதல் 3 டோஸ்களை செலுத்துவதில் ஆர்வமாக வருவோர் சிலர் 4 வது தடுப்பூசி செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். இவர்கள் மறுபடியும் முதலில் இருந்து ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. கடிபட்டவர்கள் ஞாபகமறதி, காலம் தாழ்த்தி மூன்று டோஸ் எடுத்துக் கொண்டு விட்டோம், 4 வது டோஸ் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது என அலட்சியமாக இருக்கின்றனர்.

ஆண்டுகள் கடந்தும் பாதிப்பு வரலாம் சில மாதம், ஆண்டுகள் கடந்து ரேபிஸ் பாதிப்பு கடிபட்டவரின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதால், சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உருவாகின்றன. மேலும் பெரியோர்களில் பலர் 4 வது டோஸை செலுத்தாமல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். பாதிப்புகள் குறித்து தெரிந்தவர்கள் ரேபிஸ் தடுப்பூசி 4 டோஸ்களும் எடுத்துக் கொள்கின்றனர். இது குறித்து பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் குழந்தைகள், மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது.



தன்மைக்கு ஏற்ப தடுப்பூசி மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் கூறுகையில்,' மூளைக்கு அருகே கழுத்து, முகம், தோள்பட்டை இடுப்புக்கு மேற்பகுதியில் உள்ள உடலின் பாகங்களில் நாய் கடித்தால், கடியின் தன்மைக்கு தகுந்தாற்போல் ரேபிஸ் தடுப்பூசிகள் டோஸ் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும். இதே போல் கால்கள், தொடைபகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் கடித்தால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைக்குள் நாய், ஆடு, மாடு உள்ளே செல்லாமல் தடுக்க நுழைவாயிலில் பிரத்யேக உருளும் கம்பிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது என்றார்.

--

Advertisement