வெயிலால் ஒரே 'பார்முலா'வை பின்பற்றும் வேட்பாளர்கள்
கம்பம்:வெயின் தாக்கம் அதிகமானதால் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தை ரத்து செய்யும் ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் நான்கு முனை போட்டி நிலவுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வெயில் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. இதனால் வேட்பாளர்களின் பிரசாரத்தில் சிக்கல் நீடிக்கிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட நான்கு கட்சி வேட்பாளர்களுமே ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர். காலை 6:30 மணிக்கு பிரசாரத்தை துவக்கி 10:00 மணிக்கு முடித்து கொள்கின்றனர். 10:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை ஒய்வெடுக்கின்றனர். பின்னர் மாலை 5:30 துவக்கி இரவு 10:00 மணி வரை பிரசாரம் செய்கின்றனர். இந்த விசயத்தில் சூரிய பகவான் கருணை யால் நான்கு வேட்பாளர்களும் ஒரே பார்முலாவை பின்பற்றுகின்றனர்.
மேலும்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
-
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்