நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து

20

ஊட்டி: ''நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.



ஊட்டியில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறோம். த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் உள்ளனர். அதே வேளையில், போட்டி என்றால், இருமுனை போட்டியாக தான் இருக்கிறது. ஒன்று ஆளும் தி.மு.க., மற்றொன்று இதற்கு முன் ஆட்சியில் இருந்து மறுபடியும் ஆட்சிக்கு வர போகிற அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி.

மலர் வளையம் வைப்போம்...



மாநில முதல்வர் ஸ்டாலின் எங்கு பேசினாலும் தவறான நோக்கத்தில் பேசுகிறார். உதாரணமாக, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஒன்று சொன்னார். அதனை கனிமொழி திரித்து, 'நாங்கள் எல்லாம் எங்களை யாராவது எதிர்த்து பேசினால், மலர்வளையம் வைக்கும் குடும்பம்,' என்று சொல்கிறார். இது எல்லாம் மிரட்டல் இல்லையா? இ.பி.எஸ்., சொல்லும் கருத்தை கருத்தாக பேசுங்கள்; அதற்காக மலர்வளையம் வைப்போம் என்றால் என்ன அர்த்தம்.



பேச்சில் ஒரு முறையான சொல்லாடல் இருக்க வேண்டும். இ.பி.எஸ்., பற்றி உதயநிதி பேசுவது தரக்குறைவான, ஆபாசமான பேச்சு தான். அதில், எந்த மாற்று கருத்தும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் மாற்றி சொல்கிறார். யாரும் யாரையும் எதையும் செய்ய முடியாது, எதுவும் செய்ய போவதும் இல்லை. ஈரான் போரில் நாம் எப்படி மக்களை காத்திருக்கிறோம் என்று பேச அருகதை இல்லாத தலைவர் கனிமொழி. 2014ல் 14.5 கோடி குடும்பங்கள் மட்டும் காஸ் சிலிண்டர் வைத்திருந்தது. இன்று 33 கோடி குடும்பமாக உயர்த்தியுள்ளோம்.

ராஜா பேசியது முற்றிலும் உண்மை



தமிழகத்தில், 5 ஆண்டுகளில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்பது பற்றி தான் முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். அதை விட்டு, 'மண்ணில் புதைக்கிறார்கள்' என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நட்சத்திர பேச்சாளராக இருக்கும் ராஜா இதுவரை தி.மு.க., கூட்டத்தில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை.


நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோ வெளியிட்ட பிறகு அதை தி.மு.க., தலை வர்கள் மறுத்து இருந்தா லும் கூட, அது ராஜா பேசிய ஆடியோ தான்; அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும். இந்த தொகுதியின் எம்.பி., யாக இருந்தாலும் கூட ராஜாவை பிரசாரத்திற்கு கூட வர முடியாமல் முடக்கி வைத்து இருக்கிறார்கள்.
ராஜா பேசிய கருத்தை தமிழக மக்கள் எல்லோரும் இன்று தெரிந்து கொண்டனர். அவர் முதல்வரின் திறனை பற்றி தெளி வாக சொல்லி இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து சொல்வதை தி.மு.க., வின் மூத்த தலைவரே ஊர்ஜிதம்செய்து இருப்பது இந்த தேர்தல் நேரத்தில், இன்னும் எங்கள் பிரசாரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.



@block_G@

ஹெலிகாப்டரில் சோதனை

கோவையில் இருந்து நேற்று காலை ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலை, ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிக்கு காலை, 11:00 மணிக்கு வந்தார். அவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போதே, தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியை சூழ்ந்தனர். அவர்கள் பணியை செய்யட்டும் என்ற கூறி, கட்சி நிர்வாகிகளுடன் பேசியவாறு நடந்து வந்தார்.block_G

Advertisement