நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்

19


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபயிற்சியின் போது, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அந்த வகையில், புதுக்கோட்டைக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, திமுக வேட்பாளர் செல்லபாண்டியனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.



பொதுமக்களிடமும், கல்லூரி கலந்துரையாடினார். அப்போது, சிலர் அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, டீக்கடையில் அமர்ந்து டீக்குடித்து ஓட்டு சேகரித்தார். இன்று மாலை புதுக்கோட்டையிலும், இரவு திருப்பத்தூரிலும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement