தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
நமது நிருபர்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின், கொங்கு மண்டல விவசாய சங்கங்களின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மேட்டுப் பாளையத்தில் நடந்தது. இதில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க., நிறைவேற்றவில்லை. தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை, தென்னங்கள் இறக்க அனுமதி என போராடுகிறோம். விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியாக தி.மு.க., செயல்படுகிறது.
விவசாயிகள் பிரச்னைக்கு போராடினால், தி.மு.க., அரசு குண்டர் சட்டத்தில் விவசாயிகளை கைது செய்கிறது. கள் இறக்கியவர்கள், மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ஒரு கடனை கூட தன்னிச்சையாக மாநில அரசால், தள்ளுபடி செய்ய முடியாது.
நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தி, வேண்டும் என்றே மழையில் நனைய விட்டு, பின் அவை தீவனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சட்டசபையில் தி.மு.க., தீர்மானம் கொண்டுவந்தது. அதே சமயம் ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில், கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தமிழக அரசு. நம் நெல்லை நேரடியாக சந்தைப்படுத்தினால், கமிஷன் வராது என்பதால் இவ்வாறு செய்கின்றனரா?
பாமாயில் இறக்குமதி செய்தால் கமிஷன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் விற்பனை செய்தால் கமிஷன் கிடைக்காது. தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால் அது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். கள் இறக்க அனுமதிப்போருக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
திமுகவுக்கு வோட்டு போடுவது, மக்களுக்கு மக்களே சூனியம் வைத்துக்கொள்வது போல.
டாஸ்மாக், போதை மருந்து கெமிக்கலை பார்க்கும் போது கள் அவ்வளவு உடல் நல பாதிப்பை உண்டாக்காது. பாம் ஆயில் உடலுக்கு மிகவும் கேடானது. என்ன பல ஆயிரம் கோடி கமிஷன் அரசியலில் இதை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்.
பாஜகவிற்கு ஓட்டு போட்டால் தேனும் பாலும் நெய்யும் ஓடுமோ
விவசாயிகளுக்கு மட்டும் விரோத ஆட்சி அல்ல. இந்திய தேசத்துக்கே விரோத ஆட்சி. லஞ்சத்துக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆட்சி. இலவசத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் ஆட்சி, கள்ளசாராய சாவுகளுக்கு காரணமான ஆட்சி, டாஸ்மாக் போதை ஆட்சி நடைமுறையில் சாத்தியம் இல்லாதவற்றை செய்வதாக 550 டூபாகூர் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த ஆட்சி. திமுகவுக்கு ஓட்டு போடுவது தனக்கு தானே கொள்ளி வைத்து கொள்வது போன்றது.
விவசாயிகள் ஊர் தோறும் அறிவிக்க வேண்டும்....கொடுமையான ஆட்சியாளர்கள்...மக்களை பற்றி துளி கூட கவலையில்லை.....
பஞ்சாப் விவசாயிகளின் தியாக போராட்டத்தால் தப்பித்தீர்கள் இல்லை என்றால் பாஜக அதிமுக கூட்டணி அதானி கையில் ஒப்படைத்து இருப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் ஊடகங்களின் தரவுகள் அடிப்படையில் கூறுகின்றனர்.
விவசாயிகள் ஒன்று சேர்ந்தால் இந்த தீய ஆட்சியை மாற்றமுடியும். வாழ்க விவசாயிகள் சங்கம்.மேலும்
-
மாற்றத்திற்கான தேர்தல்; களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்; தொண்டர்களுக்கு தெம்பூட்டிய விஜய்
-
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் மாற்றம்
-
பாஜவுக்கு தொடர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க; ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
-
கேள்வி கேட்டவரை 'லூசு' என திட்டிய திமுக வேட்பாளர்; அண்ணாமலை கண்டனம்
-
மாநில முதல்வர்கள் முட்டிக்கொள்ளும் முதல் தேர்தல்: புது ‛‛டிரெண்ட்'' பேச்சு; நாகரீகம் போச்சு!!
-
தர்மபுரியில் அதிர்ச்சி: திமுக நிர்வாகியிடம் ரூ.8 ஆயிரம் கூப்பன்கள், கிப்ட் டோக்கன்கள் பறிமுதல்