கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
திருப்பரங்குன்றம்: ''காங்., நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத் துடன்தான் இருக்கின்றனர்,'' என எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசினார்.
மதுரை திருநகரில் நடந்த காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 22 ஆண்டு கால காங்.,- தி.மு.க., கூட்டணியில் என்ன கிடைத்தது என்று கணக்கு பார்த்தால் சிக்கலாக தான் இருக்கும். கூட்டணிக்கு நம்மை அழைக்கவில்லை; நமக்கு மரியாதை இல்லை என்பதை 20 நாட்களுக்கு தள்ளி வைத்து விடுங்கள். நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் இருக்கின்றனர் என்பது தெரியும்.
ஏப்., 23 மாலை 6:00 மணி வரை நம் பிரச்னைகளை தள்ளி வையுங்கள். நம் நோக்கம் பா.ஜ., - அ.தி.மு.க., திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதுதான். கோட்சேவின் வாரிசுகள், அமித் ஷாவின் வளர்ப்புகள் பா.ஜ., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.அ.ம.மு.க., - பா.ம.க.,வை சி.பி.ஐ., வருமான வரித்துறையைக் காட்டி மிரட்டி, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணிக்கு சேர்த்துக் கொண்டது பா.ஜ., இவ்வாறு பேசினார்.
கருணாநிதியை தவிர வேறு யாருக்குமகனமான இதயமே கிடையாது. அவுரு தான் எல்லாருக்குமே அவுரு இதயத்துல இடம் குடுத்தவரு. மவராசன் போயி சேந்துட்டாரு.
மோடி அமித் ஷா ஜெய்சங்கர் இந்தியாவில் தானே இருக்கிறார்கள் .என்னமோ வேற தேஷத்தில இருந்து இந்தியாவை காப்பாத்துறமாதிரி மெசேஜ் இருக்கு
ஜின்னாஹ் ஜிஹாதிகள் அடிமடியில் கைவைத்து விட்டார்கள், திராவிடன். நீங்கள் பேசியபடி பொது மக்களும் கனத்த இதயத்துடன் வோட்டை 20 நாள் உங்களுக்கு மட்டும் தள்ளி வைத்து அடுத்தவர்களுக்கு போட முடிவு செய்து விட்டார்கள்.
அமிஷ்த்தாவை உத்தமர் என்று வக்காலத்து வாங்குவது ஏற்புடையது இல்லை. அவர் குடும்பம் ஏகப்பட்ட தொழில் செய்கிறது, ஊழல் எதிர் கடசிகளுடன் சேர்ந்து, இது உலகறிந்த உண்மை.
Congress is a party of betrayal. They bargained for more seats from DMK by pretending to negotiate with TVK. Once deal finalized with DMK, ditched TVK. Now they are in DMK alliance they will criticize TVK and NDA alliance. I wish Congress for a "happy washout" because of their chamleon like behaviour.
மரியாதை இல்லை ஓகே, வெட்கம்/மானம்/சூடு/சொரணை உண்டா?
காரி துப்பினாலும் வருத்தப்படாத கான் க்ரோஸ்
லேட் பிக் அப் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 1967 ல் இருந்து ஒருத்தர் கோமால இருக்கறத இப்போதான் கேள்விப்படுகிறோம்.
ஜின்னாவின் வாரிசுகள் கான் கிராஸ் கட்சியினர்.... காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.... மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டது.... இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
மாணிக்கம் தாக்குர் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கனத்த இதயம், அது இதுவெல்லாம் வெறும் உதார் தான் என்பதை மக்கள் அறிவார்கள். உண்மையிலேயே கனத்த இதயம் என்றால் உங்கள் ஓட்டும், உங்களை சார்ந்தவர்கள் ஓட்டும் திமுகவிற்கு கிடைக்காமல் செய்ய உங்களால் முடியுமா? திரு. மோடிஜி அவர்களை பற்றியும், திரு.அமித் ஷாஜி அவர்களைப் பற்றியும் பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும், உமக்கு? திரு. மோடி, திரு. அமித் ஷா, திரு. ஜெய்சங்கர், திரு. அஜித் டோபல் ஆகிய சிங்கக் கூட்டம்தான் இன்றைய புவி சார்ந்த பல்வேறு இடர்களிலிருந்து உங்களையும், இந்த நாட்டு மக்களையும், ஏன் உங்கள் தலைவர் ராகுலையும்கூட காத்துவருகிறது என்பதை நினைவில் வைத்து பேசவும்.