திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் உருக்கம்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடந்தது. அங்குள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில் அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சியில், 10ம் திருமுறையாக உள்ள திருவாசகம் முற்றோதல் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். மதியம், அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

---

Advertisement