இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

சிவகாசி:''இஸ்லாமியர்களுக்கு எப்பொழுதும் துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பேன்,'' என சிவகாசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிவகாசி ஷாபி பெரிய பள்ளிவாசல் ஷாபாஸ்கான் கோரி பள்ளிவாசல், ஹனபி மகதப் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்து ஆதரவு கோரினார். முன்னதாக அவருக்கு ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜமாத் நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது:

இஸ்லாமியர்களுக்கு துணையாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். சிலர் தேர்தலுக்காக வருவார்கள் ஓட்டு கேட்பார்கள்; போவார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடனே இருப்பேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் செல்லும் அனைத்து இடங்களிலும் எனக்கு வழிகாட்டியாக ஒரு முஸ்லிம் இருப்பார். 2011 தேர்தல் போல இந்த தேர்தலிலும் எனக்காக நீங்கள் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement