மாற்றத்திற்கான தேர்தல்; களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்; தொண்டர்களுக்கு தெம்பூட்டிய விஜய்
சென்னை: இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கானது. களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கட்சியின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள்.
விசில் சின்னத்தில்
அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழக மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கட்சி வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டளிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.
இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள்.
மக்களை சந்தியுங்கள்
அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள்.
வலு சேருங்கள்
தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள். ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
@block_P@
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏப்ரல் 14ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் விஜய் பிரசாரத்திற்கு 15 நிபந்தனைகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி அளித்தார்.
block_P
@block_G@
கன்னியாகுமரியில் நாளையும் (ஏப்ரல் 12), கவரப்பேட்டையில் நாளை மறுநாளும் (ஏப்ரல் 13) விஜய் பிரசாரம் செய்ய போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டது. கவரப்பேட்டையில் வரும் ஏப்ரல் 19ம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என தவெக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.block_G
இந்த முறை குரங்க்கு பூனைகளை ஏமாற்றி அப்பம் தின்ன கதைய்யதான். விஜய் கடுமையாக குண்டர்கள் படையாளமும் ஒட்டுண்ணி சொறி ஊடகமும் தகாக்க படலாம். எதற்கும் ஜெயித்தால் அவர் கட்சியை சேர்ந்த MLA க்களுடன் வடக்கென சிறிது காலம் மறைவிடத்தில் இருப்பது உயிருக்கு நல்லது. திருட்டு பணம் அதல பாதாளம் வரை பாயும். அல்லது காளிமுத்து தா கிருஷ்ணனை ஞ்யாபக படுத்தும் நிகழ்வுகள் கண் முன்னே வந்து நின்று பய முறுத்தும்.
உன்னோட தொண்டர்கள் மரம், குட்டிச்சுவர், வேலி, மின்கம்பம், பந்தல், ஸ்பீக்கர் பெட்டி, பைக் அவ்வளவு ஏன் உன் காரின் மீது கூட ஏறி குப்புற விழுந்து கைகால் மூஞ்சி மொகரக்கட்டையை உடைத்துக்கொள்வார்களே தவிர எவனும் கீழே இறங்கமாட்டான். அவனுங்களோட தினுசே வேற.
சினிமா வேரு, அரசியல் வேரு. அதை உணர்ந்து கடுமையா, ரஜதந்திரத்துடன் வேலை செய்ய வேண்டும். ரசிகனை வெறியனை மட்டும் வைத்துகொண்டு வெற்றி பெற புடியாது. செங்கோட்டையிடம் கேட்டுப்பாரும்.
எங்களுக்கு ஏறித்தான் பணி செய்ய தெரியும்! உங்கள் வாகனத்தில் ஏறினால் காலால் உதைத்து தள்ளுகிறார்கள்! பைக்கில் ஏறி பின் தொடர்ந்தால் முட்டி மோதி கீழே தள்ளி விடுகிறார்கள்! களப் பணிக்கு இறங்கினால் ஏறி மிதித்து விட்டால்?
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம்
தமிழ்நாடு மக்களைசேரும்..
Why his meeting cancelled at Cuddalore. Vijay is taking rest today with all benefits . See at this age EPS has completed 90 percent of 234 constituencies
வாயத் தொறந்துட்டு வானத்தையே பார்த்துட்டிரு...? நோவாம நோன்பு வைக்கலாம்னு பார்க்குறீங்க...? தமிழ்நாட்டின் பெரிய பெரிய கட்சித் தலைவர்கள் கண்துஞ்சாது, மெய்வருத்தம் பாராது... இரவுபகல் பாராது... காலையில் இருந்து இரவு வரை தமிழ்நாடு முழுவதும் பட்டித்தொட்டியான கிராமம் முதல் மாநகரங்கள் வரை... தெரு தெருவாக, வீதி வீதியாக, கிராமம் கிராமமாக, மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை தேடி அவர்களிடம் நடந்து சென்று கையெடுத்து கும்மிட்டும், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களையும், மாநாடு போன்ற பிரம்மாண்ட கூட்டங்களையும் நடத்தி தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அல்லும் பகலும் அயராது ஓடிட்டே இருக்காங்க... உங்க “இந்தியாவின் நெக்ஸ் சிஎம்” விஜய்... சார்ட்டர்டு பிளைட்ல போய் இறங்கி... ஏசி வேனில் பயணித்து... மக்களை களத்தில் தெருவில் இறங்கி சந்திக்காமல் வணங்கி வாக்கு கேக்காமல்... என்னவோ ராஜராஜசோழச் சக்கரவர்த்தி மாதிரி கை அசைத்தும், வெற்றி என்ற ரெட்டை கட்டை விரலை காட்டுவதும் அகந்தையின் ஆணவத்தின் உச்சம்...? வெற்றி வரும், அது உங்க விஜய்..க்கு அல்ல, எதிர்த்து நிற்கும் ஆளுங்கட்சிக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோதான்... உங்க ஆளே அவர் தொகுதியில ஜெயிப்பது கஷ்டம்.. இப்பவும் சொல்றேன்... “ராணுவத்தில் அழிஞ்சவனவிட ஆணவத்தில் அழிஞ்சவன்தான் அதிகம்”... இது 100க்கு 10000 மடங்கு விஜய்...க்கு பொருந்தும். மக்களை களத்தில், தெருவில், சாலையில், வீதியில் சந்தித்து வணங்கி வாக்கு கேட்பதே இல்லை...
உங்களுக்கு இன்று சோசப்பு செல்லும் வாகனத்தின் பின்னால் பைக்கிலோ அல்லது ஓட்டமாகவோ முண்டியடிக்கும் வேலை ஏதும் இல்லையா?
அப்போ தான் நான் நல்லா திருட முடியும்
anything still left after AIADMK and DMK rule ? AIADMK not to be edited out
களத்தில் இறங்கி வெயில் மழை பாராமல் பணியாற்றுங்கள். நான் பனையூரில் இருப்பேன் எங்கேயும் ஓடி விட மாட்டான்
அனைவரும் தேர்தல் பணி ஆற்றுங்கள். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து எனக்கு ஓட்டு கேளுங்கள். நான் கடினமாக உழைத்தால் ஏசி ரூமில் நாட்டை எப்படி ஆள்வது என்று சிந்தித்து நித்திரை கொள்கிறேன்மேலும்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை தர மத்திய அரசு தடையா? ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் நிர்மலா பதிலடி
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தி.மு.க., வியூகம் - ஏமாறும் பழனிசாமி
-
மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் காஞ்சி வேட்பாளர் நித்யா சுகுமார்
-
'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை: சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
-
நெல் கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுதும் செயல்படும் அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம்