காங்., எம்.பி., உட்பட 226 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி: ஆலங்குளம் அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட காங்., எம்.பி., உட்பட, 226 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டம், மருதம்புத்துாரில் ஏப்., 7ம் தேதி, பனையேறி தொழிலாளி மணிகண்டன் காலில், எஸ்.ஐ., இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டார். இதில், காயமடைந்த அவர் சிகிச்சையில் உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு அமைப்பினர் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருநெல்வேலி காங்., - எம்.பி., ராபர்ட் புரூஸ், ஆலங்குளம் அ.தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன், நா.த.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, 15 பெண்கள் உட்பட, 226 பேர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement