ரூ.1,800 கோடி மதிப்பிலான அமெரிக்க ட்ரோன் மாயம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் கண்காணிப்பை முடித்து, தன் இருப்பிடம் திரும்பிய அமெரிக்காவின், 'எம்.க்யூ., 4சி' என்ற 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான ட்ரோன் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு ட்ரோனான எம்.க்யூ., 4சி டிரைட்டன், அந்நாட்டின் விலை உயர்ந்த ட்ரோன்.
ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பறந்து கண்காணிப்பை முடித்து, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமான தளத்திற்கு நேற்று திரும்பியது.
இந்த ட்ரோன், '7700' என்ற அவசரகால சிக்னலை அனுப்பி விட்டு, கீழ் நோக்கி இறங்க துவங்கியது. எச்சரிக்கையை விடுத்த சிறிது நேரத்திலேயே மாயமானது.
ட்ரோன் மாயமாவதற்கு முன்பு வரை ரேடாரில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. ட்ரோன் விபத்துக்குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
ஈரானுடைய போக்கும் சரியில்லை. ஒவ்வொரு என்னை வர்த்தக கப்பலுக்கு, 1.5 மில்லியன் அமெ. டாலர் கொடுப்பது சாத்தியமில்லை.
ஆகையால், இந்தியா, மரபு சாரா எரிபொருளை நோக்கி விரைந்து செல்ல வேண்டும் என்பதே தற்போதைய நியதி.
"இராமர் பிள்ளை": என்னதான் நமது அரசு இவரை அங்கீகரிக்காவிட்டாலும், இன்னும் இவர் மூலிகை பெட்ரோலை திறன்பட செய்துகொண்டுதான் இருக்கிறார் என்பதை சமீபத்தில் அறிந்தேன். ஆகையால், இவரைக் கூட ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு, மக்களுக்கு பயனிருந்தால், முன்னிலைப்படுத்தலாமே
"அந்தமான் பகுதி எண்ணை வளம்": கடந்த ஒரு வருடத்திற்கு முன், இந்த பகுதியில், அதிக எண்ணை வளம் இருப்பதாக செய்தியறிந்தேன். இதை ஏன், போர்க்கால அடிப்படையில் துரிதப் படுத்தக் கூடாது?
"சோலார்" : இன்னும் கூட சோலார் மிகவும் அதிக விலைக்கே விற்கப்படுகிறது. நாட்டின் நிலை கருதி, இதன் மீதான விலையையும் குறைத்து, அதிக மக்களை இதை நோக்கிச் செல்ல ஊக்கப் பாடுத்தலாமே
"அணு மின்சாரம்": நல்ல செய்தியென்னவென்றால், நமது நடுவண் அரசு, சமீபத்தில், தோரியம் என்கிற தாது அதிகளவில், அதாவது, உலகிலேலேயே 22% அளவிற்கு இந்தியாவில் கிடைப்பதால், இந்த தாதுவை செறிவெற்றி , அதிகளவில் அணு மின்சாரம் தயாரிக்க முற்பட்டிருப்பதாக அறிந்தேன். இவ்வாறு செய்தால், பிற தேசங்களிலிருந்து நிலக்கரியைக் கூட வாங்குவதை நிறுத்திக் கொள்ளலாம்.
இராமர் பிள்ளை ஒரு ஏமாற்றுப் பேர்வழி. அவரை வைத்து திமுகவினர் கல்லா கட்டிக் கொண்டனர், திருட்டு பெட்ரோல் விற்று..இப்போது கேஸ் சிபிஐ கையில் ..
ஈரானால், இது போன்று பல 1800கள் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கின்றன என்பது புலப்படுகிறது. அமெ.வை இப்படிச் சுரண்டியே காலி செய்தால்தான் உலக நாடுகள் நிம்மதியாக வாழ முடியும்.
இஸ்ரேல் செய்வதும் மிகவும் தவறான செயல். என்னதான் இந்தியாவுக்கு நண்பன் எனக் கூறிக்கொண்டாலும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
இதுதான் சாக்கு. தன்னை வீழ்த்த யாராலும் முடியாது. தங்களது இராணுவ பலம் பெரியது என்ற ஈரானின் நினைப்பே, ட்ரம்பின் "வரி விதிப்பு" என்கிற வியாதி தொற்றிக்கொள்ள காரணமாகியிருக்கிறது. அதாவது, பார்மோஸ் வழியாகச் செல்லும் அனைத்து கலங்களும், பேரலுக்கு ஒரு டாலர் செலுத்த வேண்டும் என்ற நாட்டாமை போக்கு.
ஆக, தடியெடுத்தவர்கள் எல்லோரும் தண்டல்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்பது நிதர்சனமாகிவிட்டது.
சும்மா இருந்தவனை சொருஞ்ச இதான் நிலைமை
ஒரு டிரோனை அழிக்க 10 டிரோன்களை குருட்டுத்தனமாக அனுப்பினால் எளிதாக அழிக்கலாம்.மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்