தொடர்ந்து மூன்றாவது வாரமாக லாபம் கொடுத்து வரும் தங்கம்
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால், நேற்று தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், வாராந்திர அடிப்படையில் தங்கம் விலை 1.80 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மூன்றாவது வாரமாக, தங்கம் லாபத்தை தக்க வைத்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, ஜூன் மாத முன்பேர வர்த்தக ஒப்பந்தத்துக்கான 10 கிராம் தங்கம் விலை, அரை சதவீதம் குறைந்து, 1.52 லட்சம் ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு, சந்தையில் பணவீக்க அச்சத்தை குறைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தாது என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், கச்சா எண்ணெய் விலை இந்த வாரம் 11 சதவீதம் சரிந்துள்ளது. இது, உலகளாவிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு காரணியாக உள்ளது.
இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலையில் குறுகிய கால ஊசலாட்டங்கள் இருந்தாலும், வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் வலுவடைந்து வருவதால், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்கம், தொடர்ந்து ஒரு பாதுகாப்பான புகலிடமாகவே நீடிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா