ஏ.ஐ. சர்வதேச மாநாடு
கோவை: நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 'ஏ.ஐ., கிரீன் எட்ஜ் கம்யூட்டிங்', என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது.
சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தொடர்ந்து, இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் நுார் அகமது, சந்திர ரிஜால்திபெபே பேஷா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன கணினி முறைமைகள் குறித்து பயனுள்ள அறிவுரைகளை பகிர்ந்தனர்.
பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாநாட்டில் கல்லுாரியின் செயலர் நீலராஜ், இயக்குனர் வினோத், முதல்வர் ஜெகதீசன் மற்றும் அகாடமிக் டீன் பாகீரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
-
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்