தி.மு.க.வினர் தேர்தல் பணி மந்தம்: 'நிதி சென்று சேரவில்லை' என புகார்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க.வின் தேர்தல் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, அவிநாசி, காங்கயம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் பூத் கமிட்டி மற்றும் அடிமட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டிய 'தேர்தல் செலவின நிதி' இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை.

வாகன எரிபொருள் மற்றும் உணவுச் செலவுக்கான நிதி கிடைக்காததால், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்குதல் போன்ற பணிகள் மந்தமாக உள்ளன. உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றத்தால் நிதி கையாளுவதில் தெளிவற்ற நிலை நிலவுகிறது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை சோதனைகளால் நிதியைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

நிதியை இப்போதே செலவிடாமல் இறுதி நாட்களில் பயன்படுத்துமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.



இதனால் திண்ணைப் பிரசாரங்கள் மற்றும் விளம்பரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பூத் கமிட்டிகளின் இந்த மந்தநிலை தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உடன்பிறப்புகளே ஆதங்கப்படுகின்றனர்.

Advertisement