பிரசாரத்தில் இணைந்த அமைச்சர்கள்

திருப்பூர்:காங்கயத்தில் அமைச்சர் சாமிநாதன் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று இவர் சென்னிமலை அடுத்த எல்லைகுமாரபாளையம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு புறப்படுகையில், சக்திநகர் அருகே எதிரே காரில் வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சாமிநாதனுடன் பிரசாரத்தில் இணைந்து கொண்டார்.

அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தியது தி.மு.க. அரசு தான். அந்தத் திட்டத்திற்கான முதல் கையெழுத்திட்டு, ஒப்புதலை அறிவிக்க அமைச்சர் சாமிநாதனிடம் தான் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், இந்த இலவசப் பயணத் திட்டத்தை தமிழகத்திலேயே முதன்முதலில் தொடங்கி வைத்த பெருமை காங்கயம் தொகுதிக்கு உண்டு; அந்தத் தொகுதி அமைச்சர் சாமிநாதன் என்பது உங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். தி.மு.க.வின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதை அறிந்தவுடன், மகளிருக்கு 5,000 ரூபாய் போனஸ் உதவித் தொகையை வழங்கி இன்ப அதிர்ச்சி தந்தது தி.மு.க. அரசு.

தற்போது தி.மு.க. செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களைச் சொல்லி முடிக்கவே நேரம் போதாது, அவ்வளவு திட்டங்கள் இருக்கின்றன. அதைவிட அதிகமான திட்டங்கள் இந்தத் தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றுள்ளன. தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைந்ததும், தமிழகத்தில் உள்ள 35 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்கப்படும்.

---

சென்னைமலை அருகே எல்லைகுமாரபாளையம் பகுதியில், அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement