நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.,வாக இருப்பேன் வில்லிவாக்கம் கார்த்திக் மோகன் வாக்குறுதி

சென்னை: ''வில்லிவாக்கத்தில், உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்,'' என, பிரசாரத்தின்போது, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன் தெரிவித்தார்.

வில்லிவா க்கம் தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகன், 95வது வார்டுக்கு உட்பட அகத்தியர் நகரில் நேற்று, பிரசாரத்தை தொடங்கினார்.

பிள்ளையார் கோவில் தெரு, குமாரசாமி நகர், ராதாகிருஷ்ணன் தெரு வழியாக திருநகர் மக்களிடம் தொகுதி பிரச்னைகளை கேட்டறிந்து, தி.மு.க., ஆட்சி அமைந்த பின், உடனுக்குடன் தீர்வு காணப்படும் என, வாக்குறுதி அளித்தார்.

முன்ன தாக, 95வது வார்டுக்கு உட்பட மசூதிக்கு சென்று, இஸ்லாமியர்களை நேரில் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஐ.சி.எப்., லேபர் யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்திக் மோகன், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, ஆதரவு கோரினார். நிகழ்வில், பகுதி செயலர்கள் ஜெயின், வாசு மற்றும் தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது, கார்த்திக் மோகன் பேசியதாவது:

பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை திறம்பட தீர்க்க, வடிகால்வாய்கள் வலுப்படுத்தப்படும். அதற்காக, சிறப்பு குழு அமைக்கப்படும். சிட்கோ நகரில், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீரேற்று நிலைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்.

சிட்கோ நகர் - எம்.டி.எம்., சாலை வழியாக கோயம்பேடிற்கும், வில்லிவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சிட்கோ நகர் வழியாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கும், பேருந்து வசதி ஏற்படுத்தப்படும்.

தொகுதிக்கு புதிய அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அலுவலகம் திறக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை எளிதாகவும், வசதியாகவும் பெற வழிவகை செய்யப்படும்.

வில்லிவாக்கத்தின் அடையாளத்தை நிலை நாட்ட, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு 'சிட்கோ நகர்' மெட்ரோ நிலைய பெயர் மாற்றப்படும்.

வில்லிவாக்கம் தொகுதியில் தான் குடும்பத்துடன் வசிக்கிறேன். தொகுதிக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.,வாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement