ரிஷிவந்தியம் தொகுதியில் 'பூத் சிலிப்' வழங்கல்
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடந்தது.
ரிஷிவந்தியம் தொகுதியில் 2.70 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணி துவங்கியது. அதன்படி, ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி வாணாபுரத்தில் பூத் சிலிப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தங்களது பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கி வருகின்றனர். வரும் 17ம் தேதிக்குள் வாக்காளர்களிடம் நேரடியாக 'பூத் சிலிப்' வழங்க வேண்டும், தனிப்பட்ட நபர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் 'பூத் சிலிப்'களை மொத்தமாக வழங்கி, வாக்காளர்களிடம் விநியோகிக்குமாறு தெரிவிக்க கூடாது. 'பூத் சிலிப்' பெறும் நபர்களிடம் கட்டாயம் கையொப்பம் பெற வேண்டும். கண்டறிய முடியாத அல்லது வெளியூரில் தங்கியுள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படாத 'பூத் சிலிப்'களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்