மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
தேனி, மே 3
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் விவசாயிகள் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வயல்வெளிகளில் பணி மேற்கொள்வதை தவிர்க்க தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நிர்மலா அறிவுறுத்தி உள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: மாவட்த்தில் மா,ஏலம், காபி, தேயிலை, முந்திரி உள்ளிட்ட பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் சுமார் 50ஆயிரம் எக்டேரிலும், வாழை, பப்பாளி, காய்கறிகள் பயிர்கள் 15 ஆயிரம் எக்டேரில் சாகுபடியாகிறது.மே முதல் செப்., வரை பருவமழை குறைந்து, வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வயலில் பணிகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு காலை, மாலையில் நீர் பாய்ச்ச வேண்டும். வெப்பத்தினை தாங்க கூடிய ரகங்களை நடவு செய்ய வேண்டும். ‛மல்சிங் சீட்’ பயன்படுத்தினால் களைகள் வளர்வதை தவிர்த்து, தண்ணீர் சிக்கனம் கடைபிடிக்கலாம். பயிர்களில் அதிகம்நீர் ஆவியாவதை தடுக்க டி.ஏ.பி., 2 சதவீவீதம், பொட்டாசியம் குளோரைடு 1 சதவீதம் காலை, மாலையில் தெளிக்கலாம். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் நீர் பிடிப்ப திறன் அதிகரிக்கும், களை, பூச்சி தாக்குதல் குறையும் என தெரிவித்துள்ளார்.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்