ஐ.எஸ்.எல்., கால்பந்து: இன்டர் காஷி வெற்றி

கொல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கொல்கட்டா அணி 1-0 என, முகமதன் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. நேற்று, கொல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் முகமதன், இன்டர் காஷி அணிகள் மோதின. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இன்டர் காஷி அணியின் முகமது ஆசிப் கான், ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய முகமதன் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.


ஆட்டநேர முடிவில் இன்டர் காஷி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் காஷி அணி இதுவரை விளையாடிய 7 போட்டியில், 2 வெற்றி, 2 'டிரா', 3 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆறு போட்டியிலும் தோல்வியடைந்த முகமதன் அணி, கடைசி இடமான 14வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement