கோப்பை வென்றார் சின்னர்: மாஸ்டர்ஸ் டென்னிசில் அசத்தல்
மான்டி கார்லோ: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் இத்தாலியின் சின்னர் கோப்பை வென்றார்.
மொனாகோவில், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய சின்னர், இரண்டாவது செட்டை 6-3 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சின்னர் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் அரங்கில் 8வது முறையாக கோப்பை வென்ற சின்னர், ஒட்டுமொத்தமாக தனது 27வது பட்டத்தை வென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
Advertisement
Advertisement