ஓட்டு வங்கிக்காக தாஜா அரசியல்: திரிணமுல் மீது மோடி விமர்சனம்
சிலிகுரி: “வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிரிக்க நினைக்கும், சின்னஞ்சிறு குழுக்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ், வீதி முதல் பார்லிமென்ட் வரை வரிந்து கட்டி வருகிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, தேச விரோத கும்பலை கூட அக்கட்சி தாஜா செய்ய தொடங்கியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 294 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக வரும் 23 மற்றும் 29ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆட்சியில் நீடிக்கும் முனைப்பில் ஆளும் திரிணமுல் காங்கிரசும், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இங்குள்ள சிலிகுரியில், பா.ஜ., சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டின் பிற பகுதிகளுடன், வடகிழக்கு மாநிலங்களை இணைப்பதற்காக சிலிகுரி வழித்தடத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த முக்கிய வழித்தடத்தை துண்டிக்கப் போவதாக சின்னஞ்சிறிய குழுக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றன. வடகிழக்கு மாநிலத்தை தனியே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.
இப்படிப்பட்ட தேசவிரோத கும்பல்களுக்கு ஆதரவாக, திரிணமுல் காங்., செயல்படுகிறது. அவர்களுக்காக வீதி முதல் பார்லி., வரை அக்கட்சி வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது. அதற்கு தாஜா அரசியலே முக்கிய காரணம். இது தான் திரிணமுல் காங்., கட்சியின் உண்மையான முகம். கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் மேற்கு வங்கத்தை, அக்கட்சி பல வழிகளில் சுரண்டி அழித்து விட்டது.
முக்கியமான மத்திய திட்டங்களை நிறைவேற்றவிடாமல் முடக்கி வைக்கிறது. இதனால், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு திட்டங்கள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் மதரசாக்களை மேம்படுத்த, 6,000 கோடி ரூபாயை திரிணமுல் அரசு ஒதுக்கியது. ஆனால், மாநில வளர்ச்சி என வரும்போது சொற்ப அளவிலேயே நிதியை ஒதுக்குகிறது. பழங்குடியினர், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான கட்சியாக திரிணமுல் விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@ ஆட்சியை அகற்ற ரூ.1,000 கோடி பேரம்? மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமுல் காங்., ஆட்சியை அகற்ற, பா.ஜ., 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசி உள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட பா.ஜ., தலைவர்களுடன், ஆம் ஜனதா உனாயன் கட்சி தலைவர் ஹுமாயுன் கபீர் தொடர்பு வைத்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் சமீபத்தில் வெளியாகி இருந்தன. அதில், திரிணமுல் காங்., கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற, பா.ஜ., தலைவர்களுடன் அவர் பேரம் பேசுவது தெளிவாக பதிவாகி இருந்தது. இதற்காக, முன்தொகையாக 200 கோடி ரூபாய் தொகையையும் அவர் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.block_B
அவர் மைனாரிட்டயை தாஜா பண்ணுகிறார், நீங்கள் மெஜாரிட்டியை தாஜா பண்ணுகிறீர்கள், அவ்வளவு தானே வித்தியாசம்?
அரசியல் நாகரீகத்தையும் தேர்தல் முறையும் கெடுத்தது.. இவருக்கு என்ன உரிமை இருக்கிறது
அம்மணி செய்யிற தில்லாலங்கடிக்கு எதிர் தில்லாலங்கடி செஞ்சாத்தான் சரிப்பட்டு வரும் ...... அதுதான் நியாயமும் கூட .......
விஷத்தை விஷத்தால் தான் எடுக்க வேண்டும். அதற்காக பா ஜ க எந்த எல்லைக்கும் சென்று வெற்றி வாகை சூட வேண்டும்.மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி